Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்க்கு விக்கிரவாண்டி சொல்லும் செய்தி என்ன? சீமான் தோற்ற இடம்? ரவீந்திரன் போடும் கணக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீமான் அளவுக்கு அரசியலில் விஜய் வெற்றி பெறவே முடியாது என்றும் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதைத்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி சொல்வதாகவும் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2026க்கு ஒரு முன்னோட்டமாக இருக்கப்போகிறதோ இல்லையோ, ஆனால், வட தமிழ்நாடு அரசியல் களம் எந்தளவுக்கு சாதிரீதியாகச் செயல்படுகிறது என்பதைப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறது. அதிமுக தேர்தலைப் புறக்கணித்தாலும், அந்தக் கட்சியின் வாக்குகள் திமுகவுக்கு கணிசமாக விழுந்துள்ளன என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், ரவீந்திரன் துரைசாமி அதிமுக வன்னியர் ஓட்டுகள் பெரும்பாலும் பாமகவுக்குத்தான் விழுந்துள்ளது என்றும் வன்னியர் அல்லாதவர்களின் வாக்குகள் மட்டுமே திமுகவுக்குச் சென்றுள்ளது என்றும் ஒரு கள நிலவரத்தை முன்வைத்து விளக்கங்களை அளித்துள்ளார்.

Vijay seaman

தேர்தல் களத்தில் தமிழர்களாக ஒன்றிணைவோம் என்று சீமான் கூறினாலும், வன்னியர்கள் அவரது கட்சியை ஆதரிக்கவில்லை என்று ஒரு புள்ளிவிவரத்தைக் கூறியுள்ளார். இவர் சொல்வதைப்போல தர்மபுரி தொகுதியிலும் கூட வன்னியர் அல்லாத தலித் மக்களின் வாக்குகளைத்தான் சீமானால் பெற முடிந்துள்ளது. வட தமிழகத்தில் சீமானின் தமிழர் ஒற்றுமை என்று குரலுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில் பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டி ரவீந்திரன் துரைசாமி சில விளக்கங்களை அளித்துள்ளார். அவர் இது குறித்துப் பேசும் போது, "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வாக்குகள் பாமகவுக்கு வரவில்லை என்று சிலர் பேசி வருகிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை. ஏனென்றால், விக்கிரவாண்டி தேர்தல் களம் வன்னியர் மற்றும் வன்னியர் அல்லாதவர் என்றுதான் கடைசிவரை இருந்துள்ளது என்பது பூத் வாரியாக விழுந்துள்ள வாக்குகள் மூலம் அறிய முடிகிறது. குறிப்பாகச் சொன்னால், அதிமுக வன்னியர் வாக்குகள் பாமகவுக்குத்தான் சென்றுள்ளன. காரணம், எடப்பாடி பழனிசாமிதான் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுத்தார் என்பதை வன்னியர்கள் நம்புகிறார்கள்.

அது சட்டரீதியாக இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கோரிக்கையை முதன் முதலாக ஆதரித்து இடஒதுக்கீடு கொடுத்தவர் எடப்பாடிதான். அந்த விசுவாசம் வன்னியர்களுக்கு இருந்ததால்தான் அதிமுக வன்னியர்கள் பாமகவுக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல வன்னியர் அல்லாத அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். எனவேதான் இந்தளவுக்கு அதிகமான வாக்குகளை பாமக விக்கிரவாண்டியில் பெற்றுள்ளது.

Vijay seaman

ஒருவேளை இதைப் புரிந்துகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டியில் போட்டியிட்டிருந்தால், அதிமுக பென்னாகரம் தொகுதியில் 3ஆவது இடத்திற்குப் போனதைப் போல போய் இருக்கும். அதை உணர்ந்தே அவர் ஒதுங்கிக் கொண்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 9 தொகுதிகளிலும் பாமகவை அதிமுக 3 ஆவது இடத்திற்கு தள்ளியது. அதற்குக் காரணம், வன்னியர்கள் அதிமுக தங்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கொடுத்ததற்கு விசுவாசமாகச் செயல்பட்டுள்ளனர்.

இதை உணராமல் தான் சீமான் விக்கிரவாண்டியில் போட்டியிட்டார். அவருக்கு ஒன்றரை சதவீதம் தான் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் களம் சாதிரீதியாகத்தான் செயல்பட்டுள்ளது. இதுதான் வட தமிழ்நாடு அரசியல் களம். அதை எல்லாம் புதியதாக வரும் விஜய் உணர வேண்டும். சீமானே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் இதை உணர்ந்திருக்கிறார். எடப்பாடி தேர்தல் புறக்கணிப்பு எனச் சொன்னதால் அவரது தொண்டர்கள் ஓட்டுப் போடாமல் இல்லை.

ஜெயலலிதா இதற்கு முன்பாக பர்கூர், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் போன்ற தேர்தல்களைப் புறக்கணித்திருக்கிறார். அப்போது 10% வாக்குகள் விழவே இல்லை. ஓட்டுப் பதிவு சதவீதமே குறைந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி சொன்னபோது வாக்கு சதவீதம் குறையவில்லை. ஏனென்றால், அவரது கட்டுப்பாட்டில் அதிமுகவினர் வாக்குகள் இல்லை.

நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டியில் 5.5% வாக்குகளைப் பெற்றுள்ளது. வன்னியர்கள் வாக்கு சீமானுக்குக் கிடைக்கவே இல்லை. பட்டியலின மக்கள், வண்ணார்கள், நாவிதர் ஓட்டு அதிகம் விழுந்துள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் வன்னியர் ஓட்டுக்கள் குறைவாக விழுந்துள்ளன. அதிமுகவைப் பலவீனப்படுத்தித்தான் நாதக வளர முடியும். ஜெயலலிதா வீரப்பனுக்கு எதிராகக் களமாடினார். அதனால் வன்னியர் அவரை கைவிடவில்லை. சீமான் வீரப்பனை ஆதரித்தார். அப்படி இருந்தும் அவருக்கு வன்னியர்கள் வாக்களிக்கவில்லை. இதுதான் கள யதார்த்தம்" என்றவர் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி பற்றி ஒரு கணக்கை முன்வைத்துள்ளார்.

Vijay seaman

"இந்திய அளவில் இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு அணிகள்தான் வலுவாக இருந்தன. ஒன்று என்.டி.ஏ கூட்டணி. மற்றொன்று இந்தியா கூட்டணி. இந்த இரண்டிலும் சேராத கட்சிகள் மிகப்பெரிய சரிவை தேர்தலில் சந்தித்தன. குறிப்பாக மாயாவதி. அடுத்து தெலங்கானாவில் பி.ஆர்.எஸ்., பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம், ஹரியான லோக் தள் பார்டி, ஒடிசாவில் பிஜு ஜனதா தள் எல்லாம் தங்களின் செல்வாக்கை இழந்துவிட்டன.

ஆனால், இந்தியா மற்றும் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெறாமல் இந்தத் தேர்தலில் நின்று கட்சிக்கு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். நான் முன்பே சொன்னேன் அவரது கட்சி 3.8% இருந்து இரண்டு மடங்கு உயரும் என்று. அவர் 8% போய்விட்டார். இது சட்டசபைத் தேர்தலில் இன்னும் அதிகமாகும் என்று நான் சொல்கிறேன்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+