விக்ரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்
Recommended Video
விழுப்புரம்: விக்ரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி இன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016ம் ஆண்டு வெற்றி பெற்றவர் ராதாமணி.

70வயதாகும் எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை காலமானார்.
ராதாமணி எம் ஏ படித்துள்ளார். விவசாய குடும்பத்தைச் சேந்தவர் ஆவார் கலிஞ்சிக்குப்பம்தான் இவரது சொந்த ஊர். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் திமுக மாவட்ட அவைத் தலைவராக இருந்து வந்தார். மாவட்ட மூத்த திமுக பிரமுகர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். திருமணம் செய்து கொள்ளாமல் திமுகவுக்காக உழைத்து வந்தவர் ஆவார். ராதாமணியின் மரணம் திமுக பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் ராதாமணி மரணம் காரணமாக விரைவில் விக்ரவாண்டி தொகுதியிலும், வசந்தகுமார் எம்பியாக மாறியதால் நாங்குநேரி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இத்துடன் வேலூர் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடக்க உள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications