விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்.. சீமான் அறிவிப்பு
சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் அதிமுக மற்றும் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை போட்டியிடப்போவதில்லை என அறிவித்துவிட்டன. இந்நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தல்களில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் சமூக செயற்பாட்டாளரான கு கந்தசாமி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். நாங்குநேரியில் சா.ராஜநாராயணன் நாம் தமிழர் சார்பில் போட்டிடுகிறார். இவர் இளங்கலை வரலாறு பட்டம் பெற்றவர் ஆவார். காமராஜர் நகரில் (புதுச்சேரி) பிரவினா மதியழகன் நாம் தமிழர் சார்பில் போட்டிடுகிறார். இவர் குத்தூசி மருத்துவப் பட்டயப்படிப்பு(அக்குபஞ்சர்) படித்துள்ளார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications