விசித்திரம் விக்கிரவாண்டி.. விஜய்யின் மாநாட்டு திடலுக்கு வேகமாக வந்த நபர்.. அடுத்து நடந்ததை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் மாநாடு நடைபெறும் இடத்தில், இப்படியொரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.. இந்த சம்பவத்தை தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்..

கட்சி துவங்கியதிலிருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகளும், பரபரப்புகளும் நிறைந்து காணப்படுகிறது விஜய்யின் தமிழக வெற்றி கழகம்.. கட்சி கொடி, கட்சியின் பெயர், கட்சி மாநாடுக்கான அனுமதிஎன ஒவ்வொரு விஷயத்திலும் எழக்கூடிய விமர்சனங்களை விஜய் கட்சியினர் அடித்து நொறுக்கி மேலெழுந்து கொண்டிருக்கிறார்கள்.

vikravandi vijay conference

விக்கிரவாண்டி: அந்தவகையில் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்க போகிறது.. மாநாட்டிற்கு வருகிற வாகனங்களை நிறுத்த சாலையின் இருபுறமும் தனியார் நிலம் 87 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ஆனால், வாகனங்களை நிறுத்த இடம் போதாது கூடுதல் இடம் தேவைப்படுகிறது, மாநாட்டிற்கு வரும் வாகனங்களால் சாலை போக்குவரத்துக்கு இடையூறு இருக்க கூடாது., நடிகர் விஜய் மாநாடு மேடைக்கு வர தனிவழி ஏற்படுத்த வேண்டும் என போலீசார் ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறார்கள். எனவே, மாநாடு மேடைக்கு வர தனிவழியும் அமைக்கப்பட்டு வருகிறது. எனினும், பொதுவால் என்பவருக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து, அவரிடம் பேச்சு வார்த்தையும் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

எதிர்பார்ப்புகள்: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திட்டங்களை விஜய் தீவிரமாக செயல்படுத்தி வருவதால், இந்த மாநாட்டுக்கான எதிர்பார்ப்புகள் தமிழகத்தில் அதிகரித்தும் வருகிறது.... மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகளால் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், வழக்கமாக அக்டோபர், தீபாவளி நேரங்களில் மழைப் பெய்வது வழக்கமான விஷயமாகும்.. தற்போது பருவமழையும் துவங்கிவிட்டதால், மழையால் எந்தவிதமான பாதிப்பும் மாநாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்பதால், அதற்கான தயாரிப்புகளையும் கட்சி தரப்பில் முன்னதாகவே செய்து வருகின்றனர்.

பாண்டியன்: இப்படிப்பட்ட சூழலில், விக்கிரவாண்டியில் நேற்றைய தினம் ஒரு ஆச்சரியம் நடந்துள்ளது.. இங்குள்ள ஏழாய் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர், தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்களை அழைத்துக் கொண்டு மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளார்.. பிறகு திடீரென அங்கு விளக்கேற்றி வழிபாட்டையும் நடத்தியிருக்கிறார்..

அதாவது, மழை வந்துமாநாடு பாதிக்காமல், முழுமையாகவும், சிறப்பாகவும், நடைபெறவேண்டும் என்பதற்கான வழிபாடு இதுவாகும். மாநாட்டில் மழை வந்துவிடக்கூடாது என்றும் பாண்டியன் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

ஆச்சரியம்: பாண்டியனுக்கு 36 வயதாகிறது.. இவர் ஒரு பெயிண்டர்.. தமிழக வெற்றிக் கழக தீவிர தொண்டராகவும் இருந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மாநாட்டு திடலுக்கு, தன்னுடைய குடும்பத்தினருடன் வந்து, விளக்கேற்றி வழிப்பட்டதை , அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள்.. "மழையால் இந்த மாநாடு பாதிக்கக்கூடாது, மாநாடு நடைபெறும் வரை மழையே இருக்கக்கூடாது.. அதுக்காகத்தான் வேண்டிக்கொண்டேன்" என்கிறார் பாண்டியன்.

இதனிடையே, தமிழக வெற்றி கழக மாநாடு நடைபெறும் பகுதியில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் பின்பகுதியில் ரயில்வே தண்டவாளம் செல்வதால் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு செல்வதை தடுக்க பின் பகுதி முழுவதும் தகடுகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.. அதனை ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி, மாநாடு மேடை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டதுடன், விவசாய நிலத்தில் வாகனங்களை நிறுத்தும்போது அதற்குண்டான பாதுகாப்பு இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியிருப்பது நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+