போச்சா.. விஜயதாரணி பாஜக போனாலும்.. விளவங்கோடு காங்கிரசுக்குதான்.. தந்தி டிவி கணிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்திடிவி வெளியிட்டுள்ளது. இதில் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ சாரபில் போட்டியிடும் தாரகை கத்பர்ட் வெல்ல வாய்ப்பு இருப்பதாக தந்தி டிவி கணித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. லோக்சபா தேர்தலோடு ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள விளவங்கோடு தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள 15 சட்டப்பேரவை தேர்தல்களில் இத்தொகுதியில் 10 முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. 5 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. கடந்த 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் விஜயதரணி தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றிருந்தார். விஜயதாரணி போலவே காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த சுந்தரதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.மணி ஆகியோரும் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றிருந்தார்கள்.
விளவங்கோடு தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் களம் இறங்கினார். இதில் பாஜக சார்பில் நந்தினி களம் இறங்கினார். அதிமுக சார்பில் ராணி களம் இறங்கினார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி களம் இறங்கினார்.இந்த தொகுதியில் சுயேச்சைகள் உட்பட 10 பேர் களத்தில் இறங்கி உள்ளாரகள். இதில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் எல்லாமே பெண்கள் தான் என்பதால், பெண் தான் இங்கு வெல்ல போகிறார் என்பது உறுதியானது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்திடிவி வெளியிட்டுள்ளது.இதில் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ சாரபில் போட்டியிடும் தாரகை கத்பர்ட் வெல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக தந்தி டிவி கணித்துள்ளது,
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications