பரபரத்த விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: 65.4% வாக்குப்பதிவு!
சென்னை: விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 8 மணியை கடந்தும் தொடர்ந்து வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி விளவங்கோடு தொகுதியில் 56.68 சதவீத வாக்குகள் பதிவாகின. இறுதியில் மாலை 7 மணி வரை அங்கே 65.4% வாக்குகள் பதிவாகின.
கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோடு, சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயதரணி, அண்மையில் பா.ஜ.கவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி என மொத்தம் 10 வேட்பாளர்கள் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட், பா.ஜ.க சார்பில் நந்தினி, அ.தி.மு.க வேட்பாளராக ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
குழித்துறை நகராட்சி மற்றும் அருமனை, இடைக்கோடு, களியக்காவிளை உள்ளிட்ட 8 பேரூராட்சிகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள், சட்டசபை இடைத்தேர்தலுக்கு மற்றும் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்றத் தேர்தலுக்கு என 2 வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராணி, கோட்டார் வாகையடி தெரு அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வாக்களித்தார்.
விளவங்கோடு தொகுதியின் அருமனை 100-வது பூத்தில் தமிழக பாஜகவின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் தனது வாக்கை பதிவு செய்தார்.
விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 17.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
பகல் 1 மணி நிலவரப்படி விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 34.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி விளவங்கோடு சட்ட சபை தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 45.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், அதிகாரிகள் வாக்கு பெட்டிகளை பூட்டி சீல் வைத்துள்ளனர். எனினும், ஒரு சில வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு முன்னதாக அதிகமானோர் வாக்களிக்க வந்தனர். வெயில் தாழ்ந்தபிறகு பலரும் வந்ததால் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களித்தனர். இறுதியில் மாலை 7 மணி வரை அங்கே 65.4% வாக்குகள் பதிவாகின.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications