1 கோடி சப்ஸ்கிரைபர்கள்.. Village Cooking Channelக்கு தென்னிந்தியாவில் முதல் டைமண்ட் பட்டன் அவார்டு!
சென்னை: வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் ஒரு கோடி சந்தாதாரர்களுடன் தென்னிந்தியாவில் முதல் டைமண்ட் பட்டன் எனும் அங்கீகாரத்தையும் யூடியூபிடம் இருந்து பெற்றுள்ளது இந்த சேனல்.
Recommended Video
கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த யூடியூப் சேனலை சுப்பிரமணியன், முருகேசன், அய்யனார், தமிழ்செல்வன், முத்து மாணிக்கம், பெரியதம்பி ஆகியோர் தொடங்கினர். இந்த குழுவை வழிநடத்துபவர் முன்னாள் சமையல் கலைஞரான பெரியதம்பி.
இந்த குக்கிங் சேனல் வெறும் உணவு சமைப்பதால் மட்டும் பிரபலமாகவில்லை. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கிராமத்து கண்கவர் செட் போட்டு சமைக்கிறார்கள்.

குறைந்த ஸ்பீட்
இன்டர்நெட் மிகவும் குறைந்த ஸ்பீடே கிடைக்கும் என்கிற போதிலும் இவர்கள் நிறைய சந்தாதாரர்களை பெற்றுள்ளார்கள். கடந்த பிப்ரவரி மாதம் சிறந்த சமையல் நிகழ்ச்சிக்கான பிளாக் ஷீப் விருதையும் இந்த குழுவினர் பெற்றனர்.

ராகுல் காந்தி
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராகுல் காந்தி இவர்கள் இடத்திற்கே சென்று மஸ்ரூம் பிரியாணி, ரைத்தாவை உண்டு மகிழ்ந்தார்.மீண்டும் வரும்போது வேறு ஒரு உணவை உண்பதாக ராகுல் தெரிவித்திருந்தார். ராகுல் இவர்களை சந்தித்ததிலிருந்து இந்த குழுவினர் மேலும் பிரபலம் அடைந்துவிட்டார்கள்.

யூடியூப் நிறுவனம்
இந்த நிலையில் இவர்களுக்கு டைமண்ட் பட்டன் அங்கீகாரத்தை யூடியூப் நிறுவனம் கொடுத்துள்ளது. அதாவது ஒரு கோடி சந்தாதாரர்களை பெற்றுள்ளமையால் இவர்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. தென்னிந்தியாவில் முதல் முறையாக இவர்களுக்கு கிடைத்துள்ளது.

4 பிளே பட்டன்
பொதுவாக சந்தாதாரர்களை கணக்கில் கொண்டு 4 பிளே பட்டன்களை யூடியூப் நிறுவனம் வழங்கும். அதில் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் கிடைத்தால் சில்வர் பட்டனும், 10 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் கிடைத்தால் கோல்ட் பட்டனும், ஒரு கோடி சப்ஸ்கிரைபர்கள் கிடைத்தால் டைமண்ட் பட்டனும் யூடியூப் சேனல் தரும்.

வைரம்
டைமண்ட் பட்டன் என்றால் அதில் வைரம் இருக்காது. சில்வர் கோட்டிங் செய்யப்பட்ட மெட்டலால் ஆன மிகப் பெரிய நிறமற்ற முக்கோணத்தில் பிளே பட்டன் வடிவில் இருக்கும். இதை கடந்த 2015ஆம் ஆண்டு முதல் யூடியூப் வழங்கி வருகிறது. 35 சேனல்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications