"வில்லேஜ் குக்கிங் சேனல்'' தாத்தாவுக்கு திடீரென இதய பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி! பரபர தகவல்
சென்னை: நமது அனைவரையும் கவர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனலின் தாத்தா பெரிய தம்பி இதய நோய்ப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் யூடியூப்பில் ஏகப்பட்ட குக்கிங் சேனல்கள் இருந்தாலும் வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு இருக்கும் ரசிகர்கள் தனி. தமிழில் சுமார் 24 மில்லியன், அதாவது 2.4 கோடி சப்ஸ்கிரைபர்ஸ்களை கொண்ட ஒரு சேனலாக இது இருக்கிறது.

கடந்த 2019 தேர்தல் காலகட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி கூட இந்த வில்லேஜ் குக்கிங் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அந்தளவுக்குத் தமிழ்நாட்டைத் தாண்டி உலகெங்கும் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட ஒரு சேனலாக இது இருக்கிறது.
இந்த சேனல் முக்கியமான நபர் என்றால் அதில் வரும் தாத்தா பெரிய தம்பி தான். வயதான காலத்திலும் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு இவர் செய்யும் சமையல் அனைவரையும் வியக்க வைக்கும். இவரது வேகம் இளைஞர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்கும்.
இதற்கிடையே இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வில்லேஜ் குக்கிங் சேனலின் அட்மின் சுப்பிரமணியன் வேலுச்சாமி சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! Grandpa is admitted to the Hospital due to Heart Disease. He is in good condition now. Thank you for your love and Support!" என்று பதிவிட்டுள்ளார்.

வில்லேஜ் குக்கிங் சேனலை சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்து மாணிக்கம் ஆகிய சகோதரர்களுடன் தாத்தா பெரிய தம்பி நடத்தி வருகிறார். இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். இதில் சுப்பிரமணியன்தான் கேமராமேனாகவும் அட்மினாகவும் இருந்து வருகிறார். அவர் தான் இப்போது தாத்தா உடல்நிலை குறித்த தகவல்யைும் பகிர்ந்து கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications