கொரோனா நிவாரணத்திற்கு ரூ 10 லட்சம் கொடுத்த Village Cooking Channel.. அந்த மனசுதான் சார் கடவுள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனலை வைத்து நடத்தி வரும் 6 பேர் கொண்ட குழுவினர் கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

திறமையும், கைவசம் ஒரு தொழிலும், சுவாரஸ்யமான கண்டென்டும் இருந்தால் போதும் ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம். இப்படியாக சிலர் தங்கள் சொந்த செலவினத்திற்காக ஈட்டுகிறார்கள்.

பலர் தங்கள் செலவுக்கும் எடுத்துக் கொண்டு நலத்திட்டங்களையும் செய்து வருகிறார்கள். ஆடல், பாடல், கவர்ச்சி என இருந்த நிலையில் சமையல் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என நிரூபித்தவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த 6 பேர்.

6 மாதம்

6 மாதம்

இவர்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். 6 மாதம் விவசாயம் பார்க்கும் இவர்கள் மீதி நேரத்தில் சிறிய சிறிய வேலைகளை செய்து வந்தனர். இந்த நிலையில் 2018-ஆம் ஆண்டு யூடியூப் சேனலை தொடங்கி சமையல் செய்யும் வீடியோக்கள் போட்டு வந்தனர்.

பெரியவர்

பெரியவர்

பெரிய தம்பி என்ற பெரியவரின் ஆலோசனையின் பேரில் இளைஞர்கள் 5 பேர் பேசும் வெகுளித்தனமான பேச்சு, மண் மணம் மாறாத சமையல் முறை, திறந்த வெளியில் பிரம்மாண்ட அளவில் சமையல் செய்து அதை ஏழை மக்களுக்கும் கொடுத்து வருகிறார்கள்.

1 கோடி பேர்

1 கோடி பேர்

இதன் மூலம் இவர்களுக்கு 1 கோடி சப்ஸ்கிரைபர்கள் கிடைத்துள்ளனர். தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ராகுல் காந்தி இவர்களை நேரில் சந்தித்து மஸ்ரூம் பிரியாணியை உண்டு மகிழ்ந்தார். மஸ்ரூம் பிரியாணிக்கு ரைத்தாவை எப்படி செய்ய வேண்டும் என பெரிய தம்பி சொல்லிக் கொடுக்க ஒவ்வொரு பொருளாக தமிழில் கூறி சேர்த்தார் ராகுல்.

வார்த்தைகள் பிரபலம்

வார்த்தைகள் பிரபலம்

அதில்தான் வெங்காயம், கல் உப்பு இந்த வார்த்தைகள் பிரபலமானது. தான் ஒரு எம்பி என பாராமல் சகஜமாக இந்த இளைஞர்களுடன் பழகிய ராகுல், இவர்கள் பாய் விரிப்பில் அமர்ந்து உணவு உண்டார். இதிலிருந்து வில்லேஜ் குக்கிங் சேனல் குழு மேலும் பிரபலமடைந்தது. இவர்கள் பிளாக் ஷீப் விருதையும் பெற்றுள்ளனர்.

யூடியூப் மூலம் பணம்

யூடியூப் மூலம் பணம்

இவர்கள் தங்கள் யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்திலிருந்து 10 லட்சம் நிதியை கொரோனா நிவாரணத்திற்காக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+