ஆதவ் அர்ஜுனாவுக்கு பெரிய ஷாக்.. வில்லிவாக்கத்தை மிஸ் செய்யும் தவெக! வெளியான கருத்துக்கணிப்பு
சென்னை: வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதவ் அர்ஜுனா களமிறங்கியிருக்கும் நிலையில், அவருக்கான வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
மின்னம்பலம் செய்தி ஊடகம், தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக வெற்றி, தோல்வி குறித்து கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில், வில்லிவாக்கத்தில் யாருக்கு வெற்றி என்பது குறித்தும் கணிப்பை வெளியிட்டிருக்கிறது.

வில்லிவாக்கம் தொகுதி தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வசமுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஏ. வெற்றி அழகன், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரனை சுமார் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்தத் தொகுதியில் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக வில்லிவாக்கம் மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் ஒரு தீராத குறையாகவே பார்க்கப்படுகிறது.
அதேபோல கடந்த சில ஆண்டுகளில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், தாழ்வான பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் தேங்கும் பிரச்சினை இன்னும் முழுமையாக தீரவில்லை. சிட்கோ பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு தொழிலாளர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளும், உள்கட்டமைப்பு மேம்பாடுகளும் முக்கியமானவை.
அதேநேரம், ஆளும் கட்சி தரப்பில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கின்றன. வில்லிவாக்கம் பகுதிக்கு மெட்ரோ நிலையம் வர இருப்பது, இப்பகுதி மக்களிடையே பெரிய நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தமுறை தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக் மோகன், தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா, அதிமுக சார்பில் எஸ்.ஆர்.விஜயகுமார், நாதக சார்பில் ரோஷினி களமிறங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இதில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த கணிப்பை 'மின்னம்பலம்' செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கிறது.
திமுக கூட்டணி - 41%
அதிமுக கூட்டணி - 24%
தவெக - 26%
நாதக - 6%
என கணிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications