திடீரென கேடி ராகவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை..நடந்த சந்திப்பு.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கே.டி. ராகவன் இல்லத்தின் கிரக பிரவேசத்திற்கு நேரில் சென்றார். அங்கு ராகவனின் இல்லத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.பதிலுக்கு ராகவன் நன்றியும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் எல் முருகன் மத்திய அமைச்சரானார். அதனை தொடர்ந்து அவர் வகித்த பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அப்போது பாஜக மாநில பொதுச்செயலாளராக மிகவும் செல்வாக்குள்ள அதிகாரமுள்ள நபராக இருந்தவர் கே.டி.ராகவன்.

அப்போது ஏற்பட்ட பாலியல் சர்ச்சைகள் காரணமாக கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். இதனிடையே கேடி ராகவனின் வள்ர்ச்சி பிடிக்காமல் அவருக்கு எதிராக கட்சியில் உள்ளவர்களே சதி செய்ததாக ஒரு வீடியோ வெளியான சமயத்தில் பேசவும்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை அன்று (மே 22) முன்னாள் பாஜக மாநில பொதுச்செயலாளரான கே.டி.ராகவனின் வீட்டு கிரகபிரவேசம் நடைபெற உள்ளது.அதற்கு வருமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ராகவன் அழைத்துள்ளார்.
இதன்பேரில் 20ம் தேதி (சனிக்கிழமை) ராகவனின் இல்லத்திற்கு அண்ணாமலை சென்றார். ராகவனின் இல்லத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக புகைப்படங்களையும் அண்ணாமலை ட்விட்டரில் ஷேர் செய்தார்.இந்நிலையில் தனது வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலைக்கு கே.டி.ராகவன் நன்றி தெரிவித்தார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications