விநாயகர் சதுர்த்தி: தாம்பரத்திலிருந்து இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்! எங்கெல்லாம் செல்கிறது?
சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளை (செப்டம்பர் 7) கொண்டாடப்படும் நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து கோவைக்கும், தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வழியாக கொச்சுவேலிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (செப்டம்பர் 6-ம் தேதி) பிற்பகல் 3.45 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(06151) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.45 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும். மறுமார்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து செப்.8-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06152) புறப்பட்டு, மறுநாள் காலை 7.35மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.

இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். தாம்பரத்தில் இருந்து செப்.6, 13, 20 ஆகிய தேதிகளில் இரவு 7.30மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06035) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.30 மணிக்கு கொச்சு வேலியை சென்றடையும். மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து செப்.7, 14, 21 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.35 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06036) புறப்பட்டு, மறுநாள் காலை 7.35மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி,திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், கொல்லம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இதே மார்க்கத்தில் மற்றொரு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications