விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது ஏன்? பாஜக நயினார் கேள்விக்கு முதல்வர் பளீர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அரசு அனுமதி தரவேண்டும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வைத்த கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பதில் அளித்தார். எந்த அடிப்படையில் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார்.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் பொது இடங்களில் சிலை வைக்கவும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவை பாஜக கடுமையாக எதிர்த்துள்ளது. தமிழ்நாட்டில் தடையை மீறி ஊர்வலம் நடத்தப்படும் என்றும், எல்லோரின் வீட்டு வாசலிலும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அரசு அனுமதி தரவேண்டும். தமிழ்நாடு அரசு இது தொடர்பாக விதித்து இருக்கும் கட்டுப்பாடுகளை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்தார்.

விளக்கம்

விளக்கம்

இந்த நிலையில் நயினார் நாகேந்திரனின் கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பதில் அளித்தார். முதல்வர் தனது பதிலில், இங்கே சட்டசபை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதற்கு அனுமதி தர வேண்டுமென்று ஒரு கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறார். நான் ஒரு விளக்கத்தை அவருக்கு மட்டுமல்ல, இந்த மன்றத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும்- ஏன், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

கேரளா

கேரளா


கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கத் தேவையான கட்டுப்பாடுகளை 30-9-2021 வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்த, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது. கேரள மாநிலத்திலே, ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு, அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்த காரணத்தினால்தான், அங்கே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.

அங்கும் இங்கும் கொஞ்சம் கேஸ்கள்

அங்கும் இங்கும் கொஞ்சம் கேஸ்கள்

தமிழ்நாட்டிலும் இன்றுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முழுமையாகத் தடுக்கப்படவில்லை; அங்குமிங்கும் கொஞ்சம் இருக்கிறது. அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 50 ஏறுகிறது; 50 குறைகிறது. இப்படி ஒரு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. ஆகவேதான், பொது மக்களுடைய பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திலே கொண்டு, 15-9-2021 வரை அனைத்து சமய விழாக்களைக் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் பொருந்தும்.

 விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட சமய விழாக் கொண்டாட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளே தவிர, தனி நபர்களைப் பொறுத்தவரையில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் இல்லங்களில் கொண்டாடலாம் என்று அரசு சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இதையெல்லாம் மனதிலே கொண்டுதான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். அதையொட்டி, நான் இன்னொரு அறிவிப்பையும் நான் இங்கே வெளியிட விரும்புகிறேன்.

 தொற்று

தொற்று

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நமது மாநிலத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரக்கூடிய சுமார் 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மழைக் காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையிலே, அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுள், சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, பொது இடங்களில் விழாக்களைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது தொழிலை மேற்கொள்ள இயலாத நிலையில், அவர்களது வாழ்வாதாரம்கூட பாதிக்கப்பட்டிருக்கிறது.

வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

இதனையெல்லாம் இந்த அரசு கருத்திலே கொண்டு, இந்த 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக் கால பாதிப்பு நிவாரணத் தொகை போக, கூடுதலாக மேலும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் தனது பதிலில்குறிப்பிட்டார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+