இந்த படங்களை உத்து பாருங்க.. ஜெயிலர் டூ புஷ்பா! வித்தியாசமான சினிமா கெட்டப்கள் - கலக்கும் விநாயகர்
சென்னை: நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், ஜெயிலர் ரஜினி, புஷ்பா அல்லு அர்ஜுன், ஆர்.ஆர்.ஆர். ராம்சரண் தோற்றங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பலரை கவர்ந்து இழுந்துள்ளன.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
தமிழ்நாட்டில் குறிப்பாக பொதுமக்கள் அல்லாது இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய இந்துத்துவ அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை முன்னெடுத்து செல்கின்றன. கடந்த காலங்களில் ஒரு சில இடங்களில் விநாயகர் ஊர்வலத்தில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளன.

பலத்த பாதுகாப்பு
இந்த நிலையில் அந்த ஆண்டு மோதல்கள் ஏற்படுவதை தவிர்க்க மாநிலம் முழுவதும் அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அணிவகுப்பு ஊர்வலத்தை காவல்துறை நடத்தி இருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 3 அடி முதல் 16 அடி உயரம் வரை பல்வேறு அளவுகளில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மூன்றரை அடி கொண்ட சிறிய விநாயகர் சிலை ரூ.3,000 முதல் விற்பனையாகிறது. 16 அடி உயரத்தை கொண்ட ராட்சத விநாயகர் சிலை ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய வடிவங்கள்
முன்பெல்லாம் ஒரு சில வடிவங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வழக்கமான வடிவத்தை தாண்டி பல்வேறு புதிய வடிவங்களில் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் விநாயகர் சிலைகளை வாங்க பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜெயிலர் விநாயகர்
குறிப்பாக சினிமா ரசிகர்களை ஈர்க்கும் வகையில் திரைப்படங்களில் நடித்த நடிகர்களின் கெட்டப்களில் விநாயகர் இருப்பதைபோல் சிலைகளை கலைநயத்துடன் வடிவமைத்து இருக்கிறார்கள். நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் அதே தோற்றத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் சிலை
ஜெயிலர் ரஜினியின் கெட்டப்பில் மட்டும் விநாயகர் சிலை வடிவமைக்கப்படவில்லை. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனின் தோற்றத்திலும் சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் வரும் ராம்சரண் தோற்றத்திலும் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications