இப்ப இல்லாட்டி என்னாட்டி.. பிறகு பார்த்து தருவாங்க.. இதெல்லாம் அவமரியாதையா.. விந்தியா சூப்பர் பொளேர்
பெண்களுக்கு மரியாரை தரும் கட்சி அதிமுக என்று விந்தியா கூறினார்
சென்னை: "யார் சொன்னார்கள் அதிமுகவில் எங்களுக்கு அவமரியாதை இருக்கிறதென்று? நல்ல முறையில் எல்லாருமே நன்றாகவே இருக்கோம்.. பெண்களுக்கு மரியாதை தரப்படும் கட்சி என்றால், அது தமிழ்நாட்டிலேயே அதிமுக மட்டும்தான்" என்று வரிந்து கட்டிக் கொண்டு விந்தியா விளக்கம் தந்துள்ளார்
ஜெயலலிதாவின் வெறித்தனமான விசிறிதான் நடிகை விந்தியா... அதனால்தான் மொழி சரியாக தெரியாவிட்டாலும், அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டதுடன், நட்சத்திர பேச்சாளராகவும் துணிந்து களம் இறங்கினார்... கொஞ்சி பேசும் தமிழினை மக்கள் ரசிக்கவே செய்தனர்.

ஒவ்வொரு தேர்தலின்போதும், நட்சத்திர பேச்சாளர்களின் லிஸ்ட்டில் விந்தியா பெயரும் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் அன்பை தனிப்பட்ட முறையில் பெற்றவர் விந்தியா. ஜெ.இறந்தும்கூட, அவருக்காகவும், அவர் மீது வைத்துள்ள பிரியத்துக்காகவும் இப்போது வரை அதிமுகவில் நிரந்தரமாகவே இருந்து வருகிறார்.. அதனால்தானோ என்னவோ, அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வரை உயர்ந்திருக்கிறார்.
இப்போது விஷயம் என்னவென்றால், நேற்று முன்தினம் அமைக்கப்பட்ட அதிமுகவின் வழிகாட்டு குழுவில் பெண் பிரதிநிதிகள் யாருமே இடம்பெறவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.. "இதையே நாங்கள் செய்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா?" என்று திமுகவினர் சிலர் இதை காட்டமாகவும், வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிட்டார் விந்தியா.
பொதுவாக, திமுகவில் எந்த விமர்சனத்தை முன்வைத்தாலும், விந்தியாவின் ஆவேசம் அதிகமாக இருக்கும்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குறை சொல்வதை தவிர வேறு எதுவும் தெரியாது என்று வெளிப்படையாகவே விமர்சித்தவர், இந்த விவகாரம் குறித்தும் கருத்து கூறினார்.
"கடந்த 7-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன்... '11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் அனுபவம் மிக்கவர்கள் இருக்கிறார்கள்.. எதிர்காலத்தில் பெண்களுக்கு நிச்சயம் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்... எங்களுக்கு இங்கே எந்தவிதமான அவமரியாதையும் கிடையாது... யார் சொன்னார்கள் அவமரியாதை எங்களுக்கு இருக்கிறதென்று? நல்ல முறையில் எல்லாருமே நன்றாகவே இருக்கோம்.. பெண்களுக்கு மரியாதை தரப்படும் கட்சி என்றால், அது தமிழ்நாட்டில் அதிமுக மட்டும்தான்" என்றார்.
விந்தியா இப்படி பொத்தாம் பொதுவாக கருத்து சொன்னாரே தவிர, ஏன் 11 பேரில் ஒரு பெண் பிரதிநிதிகூட இடம்பெறவில்லை என்பதற்கான வலுவான காரணத்தை அவர் சொல்லவே இல்லை.. இதற்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "அகில இந்திய அளவில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுத்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் நிறுத்தியது அதிமுகதான்.. கடந்த தேர்தலில் பெண்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களை வெற்றிபெறச் செய்து அழகுபார்த்தவர் ஜெயலலிதா. அதேபோல், பெண்களை மாவட்ட செயலாளர்களாகவும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் அமர்த்தி அழகுபார்த்தவரும் அவர்தான்.. அதை முதல்ல தெரிந்து கொள்ளுங்கள்" என்றாரே தவிர, ஜெயக்குமாரும் 11 பேரில் ஏன் யாருமே பெண்கள் இடம்பெறவில்லை என்ற சரியான காரணத்தை சொல்லவே இல்லை.
-
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications