வினோத் காம்ப்ளி தெரியுதா? பேட்டால் மிரட்டியவர்.. பேசவே வரல.. கைகூப்பி வணங்கி.. புரட்டிப்போட்ட காலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வினோத் காம்ப்ளியை, ஒரு காலத்தில் கிரிக்கெட் மைதானத்தில் பேட்டை சுழற்றியபடி ஓடியதை பார்த்தவர்களுக்கு, இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.. 54 வயதான காம்ப்ளி இப்போது தானேவில் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கிருந்து அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில் பேசுவதற்கே கொஞ்சம் சிரமப்படுகிறார்.. அடுத்த சில நொடிகளில் அவர் சொன்ன வார்த்தைகள்தான் காண்போர் மனதை இன்னும் கனமாக்குகின்றன..!!!

"நான் இப்போது சிகிச்சை பெற்று வருகிறேன். இங்குள்ள வசதிகள் சிறப்பாக உள்ளன. இங்கு தங்கியிருக்கும்போது, நான் வீட்டை விட்டு விலகி இருப்பதாகவே எனக்கு தோன்றவில்லை. இங்குள்ள மக்களிடமிருந்து எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் கிடைக்கிறது" என்றுகூறி, கைகளை கூப்பியும் நன்றி தெரிவிக்கிறார் காம்ப்ளி.

Vinod Kambli Health Vinod Kambli Latest News Vinod Kambli Viral Video

இந்த வீடியோதான் இப்போது ரசிகர்களை கலங்க வைத்திருக்கிறது. ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒருவராக பார்க்கப்பட்ட ஒரு வீரர், இன்று உடல்நலத்துக்காக சிகிச்சை பெற்று வரும் காட்சியை பார்த்த பலரும், "காம்ப்ளி சீக்கிரம் குணமாக வேண்டும்" என்று பதிவிட்டு வருகிறார்கள்.

காம்ப்ளியின் கிரிக்கெட் பயணம்

காம்ப்ளியின் கிரிக்கெட் பயணம் சாதாரணமானது கிடையாது.. . சச்சின் டெண்டுல்கருடன் சின்ன வயதில் இருந்தே இணைந்து கிரிக்கெட் விளையாடியவர்.. ஸ்கூல் கிரிக்கெட்டில் 2 பேரும் சேர்ந்து 664 ரன்கள் குவித்த அந்த மாஸ் பார்ட்னர்ஷிப் இன்னும் கிரிக்கெட் வரலாற்றில் பேசப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது..

அதன்பிறகு இந்திய அணிக்குள் வந்த காம்ப்ளி, தனது பேட்டால் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,084 ரன்கள் எடுத்துள்ளார். 104 ஒருநாள் போட்டிகளில் 2,477 ரன்கள் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள் அடித்துள்ளார்.

1993-ல் இங்கிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் 224 ரன்கள் விளாசினார். அடுத்த வருஷமே ஜிம்பாப்வேக்கு எதிராக 227 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளில் டபுள் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

ஆனால், கிரிக்கெட் மைதானத்தில் இப்படி உயர்ந்து நின்ற காம்ப்ளியின் வாழ்க்கை பிறகு பல சோதனைகளை சந்தித்தது.. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் அவரது பயணம் முடிவுக்கு வந்தது. 2009-ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

விடாமல் விரட்டிய நோய்கள்

அதன்பிறகு உடல்நலப் பிரச்சனைகள் அவரை விரட்டின.. மது பழக்கத்துடன் போராடியதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.. 2013-ல் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. இதயத்தில் ஏற்பட்ட அடைப்புக்காக ஆஞ்சியோபிளாஸ்டியும் செய்யப்பட்டது.

2024ல் சிறுநீரகப் பாதை தொற்று, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான், மூளையில் ரத்தக்கட்டிகள் இருப்பதாக பெரிய அதிர்ச்சி வெளியானது.. இந்த சிகிச்சைக்குப் பிறகு கடந்த வரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும், மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக யாரையும் அவரால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை..

இத்தனை சோதனைகளுக்கு நடுவிலும், இப்போது தானேவில் உள்ள பராமரிப்பு மையத்தில் கிடைக்கும் அன்பையும் மரியாதையையும் பற்றி காம்ப்ளி பேசுகிறார்.

வாழ்க்கையின் கோலம்

ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நின்று கைதட்டலை பெற்றவர் காம்ப்ளி. இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்து உலகம் முழுவதும் விளையாடியவர்... ஏகப்பட்ட சாதனைகள் படைத்தவர். ஆனால் இன்று, தன்னை கவனித்துக் கொள்ளும் மனிதர்களுக்கு கைகளை கூப்பி நன்றி சொல்லும் நிலையில் இருக்கிறார்.

இதுதான் வாழ்க்கையின் கோலம்... புகழும், பணமும், சாதனைகளும் ஒரு காலம் வரைதான்.... இன்று உச்சத்தில் இருப்பவர் நாளை எந்த நிலையில் இருப்பார் என்பதை வாழ்க்கை யாரிடமும் சொல்லிவிட்டு செல்வதில்லை... அதனால்தான் ஒருவரின் புகழை மட்டும் பார்த்து வாழ்க்கையை அளக்க முடியாது.. காலம் மாறும்போது மனிதனுக்கு தேவைப்படுவது அன்பும், அரவணைப்பும், உடல்நலமும் தான்.

காலம் எவ்வளவு கொடியது

காம்ப்ளியின் இந்த வீடியோவும் நமக்கு அதைத்தான் அமைதியாக சொல்லி செல்கிறது. மைதானத்தில் அவர் அடித்த ரன்களை விட, இன்று "இங்கே எனக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வு இருக்கிறது"" என்று அவர் சொல்லும் வார்த்தைகள்தான் மனதில் நிற்கின்றன.. அவருக்காக கைதட்டிய ரசிகர்கள் அனைவருமே காம்ப்ளி எப்படியாவது விரைவில் உடல்நலம் தேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மனிதனை உச்சத்தில் தூக்கி வைத்து அழகு பார்க்கும் இதே காலம்.. ஒருநாள் இப்படி சோதனையிலும் நிறுத்திவிடுகிறதே.. காலம் எவ்வளவு கொடியது??!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+