Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ஒரு டைம் டிராவல்.. விண்டேஜ் பஸ்சில் ஜாலியாக சுற்றலாம்.. சுற்றுலா வருபவர்களுக்கு செம சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வரலாற்று சிறப்பு மிக்க 17 இடங்களை சுற்றிப் பார்க்க ஏதுவாக பழைய வின்.டேஜ் பேருந்துகள் சேவையை இன்று அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். 1980-களில் சென்னையில் வலம் வந்த வின்.டேஜ் பேருந்துகள் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலமாக சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள் வெறும் ரூ.50 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து நாள் முழுவதும் 17 இடங்களை சுற்றிப்பார்த்துக்கொள்ள முடியும்.

தமிழகத்தின் தலைநகர் சென்னை முன்பு இல்லாத வகையில் நவீனமடைந்து இருந்தாலும் பழமையை மறக்காமல் பழைய வரலாற்று சின்னங்களையும் பாதுகாக்கிறது. தமிழக அரசு அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறது.

Vintage Bus Service Launched in Chennai for City Tourists 17 historic locations

சென்னையில் வின்டேஜ் பஸ்

அதன் ஒரு பகுதியாக தான் சென்னையில் 1980-களில் வலம் வந்த பஸ்களை தற்போது சுற்றுலாவிற்காக இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. நாளை பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையை சுற்றிப் பார்க்க விரும்பவர்களுக்காகவும், வரும் நாட்களில் சென்னைக்கு சுற்றுலா வருபவர்களுக்காகவும் இந்த வின்டேஜ் சிறப்பு பேருந்து சேவையினை தமிழக அரசு தொடங்கி வைத்துள்ளது.

அமைச்சர் சிவசங்கர் இன்று 5 வின்டேஜ் பேருந்து சேவைகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் பழமைவாய்ந்த சுற்றுலா இடங்களான 17 வரலாற்றுச் சின்னங்களை சுற்றிப்பார்க்கும் வகையில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சிறப்பு பஸ்களானது இயக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த வின்டேஜ் பஸ்கள் இயக்கப்படும்.

எங்கெல்லாம் நின்று செல்லும்

சென்னையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இயக்கப்படுகிறது. குறிப்பாக சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கி பூங்கா ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், லஸ் கார்னர், சாந்தோம் தேவாலயம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, மெரினா கடற்கரை, போர் நினைவுச் சின்னம், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் மற்றும் பல்லவன் இல்லம் ஆகிய 17 இடங்கள் இந்த பயணத்தில் நிறுத்தங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கட்டணம் எவ்வளவு

மொத்தமாக ரூ.50 கட்டணம் செலுத்தினால் போது அன்றைய நாள் முழுக்க அந்த பஸ்களில் எந்த நிறுத்தத்தில் வேண்டுமானாலும் இறங்கிவிட்டு, மீண்டும் எந்த நிறுத்தத்திற்கு வேண்டும் என்றாலும் செல்லலாம். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு போகப் போக இந்த பேருந்து சேவைகளின் எண்ணிக்கையானது அதிகப்படுத்தப்படும்.

80ஸ்களில் சென்னையை கலக்கிய பஸ்கள் மீண்டும் தலைநகரில் வலம் வருவதை காண முடியும் என்பதால் பலரும் இந்த பஸ் சேவைகளுக்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிவப்பு நிறம் மற்றும் சந்தன நிறம் கலந்த இந்த பஸ்களை பழைய படங்களில் நாம் பலரும் பார்த்திருக்கக் கூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+