ஆம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்குள் மோதல்.. புழல் சிறையில் பதற்றம்.. சிறை அதிகாரி மீது தாக்குதல்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ஜாமீனில் எடுப்பது தொடர்பாக பொன்னை பாலு, மணிவண்ணன் மற்றும் புதூர் அப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சண்டையை தடுக்கச் சென்ற உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரௌடி நாகேந்திரன், அவரது மகன் அசுவத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாகச் செயல்பட்ட நாகேந்திரன், உடல் நலக்குறைவால் வேலூர் சிறையில் இருந்தபடியே அண்மையில் உயிரிழந்தார்.

புழல் சிறையில் இருந்தவர்களில் அசுவத்தாமன் உள்பட்12 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர். பொன்னை பாலு, அவரது மைத்துனர் மணிவண்ணன், வெடிகுண்டு சப்ளையர் என கூறப்படும் ரவுடி சென்னை அசோக் நகர் புதூர் அப்பு உள்ளிட்டோர் ஜாமீன் கிடைக்காமல் புழல் சிறை உயர் பாதுகாப்பு பிரிவிலேயே உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மற்றவர்களை ஜாமீனில் எடுப்பது தொடர்பான விவகாரத்தில் பொன்னை பாலு, அவரது மைத்துனர் மணிவண்ணன் ஆகியோர் ஒரு தரப்பாகவும், வெடிகுண்டு சப்ளையர் அசோக் நகர் புதூர் அப்பு தலைமையில் ஒரு தரப்பாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இரு தரப்பினரும் கைகளால் தாக்கி கொண்டனர். பின்னர் கட்டையை எடுத்துக்கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் சிறை காவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசை தள்ளி விட்டதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றார்.
இது தொடர்பாக புழல் சிறை தரப்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டுகள் சப்ளை செய்த அப்புவுக்கு பேசியபடி பணம் கொடுக்கவில்லை எனக் கூறஓஅடுகிறது. இது தவிர ஜாமீன் எடுக்கவும் ஆற்காடு சுரேஷ் தரப்பு உதவவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவுக்கும் அப்புவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications