விஐபி விருந்துகளுக்கு சொந்த காசை செலவு செய்த அதிகாரிகள்.. இப்போது ரூ.6.85 கோடி ஒதுக்கிய தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மாவட்ட நிர்வாகங்களில் வி.ஐ.பி உபசரிப்புச் செலவுகளுக்குப் பணமின்றி அரசு அதிகாரிகளே சொந்தப் பாக்கெட்டில் இருந்து செலவழிக்கும் அவலநிலை நிலவி வந்த சூழலில் இப்போது சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. முக்கிய பிரமுகர்களுக்கான விழா ஏற்பாடுகளை செய்ய நிதியின்றி தவிப்பதாக, அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ்நாடு அரசு தற்போது ரூ. 6.85 கோடி நிதியை விடுவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு நிர்வாக வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு டாபிக், மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர அவசரமாக விடுவிக்கப்பட்டிருக்கும் அந்த ரூ. 6.85 கோடி நிதிதான்.

VIP Expenses

அரசு பிறப்பித்துள்ள இந்த அரசாணையின் பின்னணியில், அரசு ஊழியர்களின் நீண்டகால குமுறலும், அது சார்ந்த எதிர்ப்புகளும் தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

விவிஐபிகளுக்காக ரூ.6.85 கோடி ஒதுக்கீடு

சமீபகாலமாக குடியரசு தலைவர், சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் நீதிபதிகள், இந்திய அரசு மற்றும் மாநில அரசின் சீனியர் அதிகாரிகள், அரசியலமைப்பு சார்ந்த உயர்பதவிகளில் இருப்பவர்கள், சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் தூதுக்குழுக்கள் என முக்கியமான சீஃப் கெஸ்ட்களின் வருகை தமிழகத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இத்தகைய உயர்மட்டப் பிரமுகர்கள் வரும்போது அவர்களுக்கான உணவு, சொகுசு தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் மற்றும் பிற புரோட்டோகால் நெறிமுறை சார்ந்த ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமே செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இந்த செலவினங்களை ஈடுசெய்ய ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த நிதி வரம்புகள் தற்போதைய தேவைகளுக்கு போதுமானதாகவே இல்லை.

இதனால் மாவட்ட கலெக்டர்கள் பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை தாண்டி செலவிட வேண்டிய நெருக்கடிக்கும் தள்ளப்பட்டனர்... அதுமட்டுமல்ல, அரசு தரப்பில் இந்த செலவுகளுக்கான பணத்தை பெற்றுத் தர வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட தாமதமானது.

அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

ஆனால் விழாவுக்கு பந்தல் அமைத்தவர்கள், வாடகைக்கு வாகனங்கள் கொடுத்தவர்கள், டிபன் விநியோகம் செய்தவர்கள் என சின்ன சின்ன வியாபாரிகளை அவ்வளவு காலம் காக்க வைக்க முடியாது அல்லவா? அதனால்தான் வேறு வழியின்றி அரசு அதிகாரிகளே தங்கள் சொந்த பணத்தைப் போட்டு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். இன்னும் சில இடங்களில், சிறு வியாபாரிகளை மிரட்டிப் பணம் கொடுக்காமல் வேலை வாங்குவதாகவும் அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இப்படியான மொத்த நிதிப் பற்றாக்குறையையும் போக்கி, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் பலத்த எதிர்ப்புகளும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர்கள் கையிலேயே முன்கூட்டியே குறிப்பிட்ட நிதியை ஒதுக்கிவிட்டால், தேவைக்கேற்ப உடனுக்குடன் செலவு செய்து கொள்வார்களே என பல தரப்பிலிருந்தும் குரல்கள் வலுக்க தொடங்கின.

ரூ. 6.85 கோடி நிதி ஒதுக்கீடு

இதற்குதான் தமிழக அரசு இப்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அத்துடன நிலுவைக் கட்டணத் தாமதங்களை தவிர்க்கவும் 2026-27 நிதியாண்டிற்காக ரூ. 6.85 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்களின் வருகைக்கான செலவுகளுக்கு இந்த நிதி பொருந்தாது.. பிற முக்கிய பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வருகைக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படும்.

இந்த நிதிப் பகிர்வு மாவட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் செலவினங்களின் அடிப்படையில் துல்லியமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் பிரமுகர்கள் வருகை தரும் கோவை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

23 மாவட்டங்களுக்கு 15 லட்சம்

அதேபோல திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, சேலம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய ஏனைய 23 மாவட்டங்களுக்கு தலா ரூ. 15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப உண்மையான செலவினங்களின் அடிப்படையில் நிதியை நேரடியாக விடுவிக்கும் முழு அதிகாரமும் இப்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், நிலுவைகளில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, அரசு அதிகாரிகளிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+