வீரமணியை ஏமாற்றிய விஐபிக்கள்.. '70 கோடி பணம்'.. காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 2 பேர் கைதாகிறார்கள்
சென்னை: பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது நிஜமான உண்மை.. எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், எவ்வளவு பெரிய உயரத்தில் போய், யாருமே தொடமுடியாத இடத்திற்கு போய்விட்டால் கூட கண்டிப்பாக சிக்குவார்கள். அவர்கள் வாழ்க்கை பூக்கள் பாதையில் இருந்தாலும், கடைசியில் தாக்கிவிடும். தொழில் அதிபர் வீரமணி வாழ்க்கை உதாரணம். பல வருடங்களாக தப்பி வந்த தொழில் அதிபர் வீரமணியிடம் ரூ.70 கோடியை வாங்கிக்கொண்டு அவரை வழக்கில் சிக்க வைத்து அவரை நம்ப வைத்து ஏமாற்றி, முதுகில் குத்தியிருக்கிறார்கள். அவராக சிக்கவில்லை. அவரை சிக்கவைத்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 2 முக்கிய அரசியல் புள்ளிகள் பெயர் அடிபடுகிறது. அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்கிறார்கள்.
தொழில் அதிபர் வீரமணியை 'போக்சோ' வழக்கில் இருந்து காப்பாற்ற முயன்றவர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் தினமும் வெளியாகி வருகிறது. . வீரமணிடயம் ரூ.70 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு அவரை முதுகில் குத்தியதுடன், போட்டுக்கொடுத்துவர்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி அம்பலமாகி வருகிறது.

இந்த வழக்கில் வீரமணியி முதுகில் குத்திய முதல் நாளே, அவர் மிகவும் நம்பி வந்த சாந்தி தான். சாந்தி தான் வீரமணிக்கு பெண்களை சப்ளை செய்து வந்தாராம். அவர்செய்த வேலை தான் இப்போது பல உண்மைகள் வெளியே வர காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் வீரமணி தைரியாக இருந்ததற்கு காரணம்.. தான் உள்ளே போனால், சாந்தியும் உள்ளே போவார் என்பது தான். ஆனால் பென்டிரைவ் காரணமாக வழக்கில் வீரமணியோடு சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிங்கனும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சாந்தி கவனித்து வந்த வீட்டில் வைத்துதான் சிறுமிகளிடம் வீரமணி சேட்டைகள் செய்ததாக சொல்லப்படுகிறது. அவர்நடத்திய சேட்டைகள் பல, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறதாம்.
அந்த வீடியோ காட்சிகளை சாந்தியும், அவரது கணவரும் வீரமணிக்கு தெரியாமல் டி.வி.யில் போட்டு பார்த்து ரசித்துள்ளார்களாம். அப்படி பதிவான சில காட்சிகளை 2 'பென் டிரைவ்'களில் பதிவு செய்தார்களாம். அதை வைத்து வீரமணியிடம் கோடிக்கணக்கில் மிரட்டி பணம் கறக்க சாந்தியும், அவரது கணவரும் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்கு 2 அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் வீரமணியிடம் பேரம் பேசினார்களாம். அவர்களில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான அரசியல் பிரமுகர் என்கிறார்கள். இன்னொருவர் தனியாக அரசியல் கட்சி நடத்தும் செல்வாக்கான தலைவர் என்கிறார்கள்.
குறிப்பிட்ட அந்த 2 அரசியல் பிரமுகர்களும் வீரமணியை தொடர்பு கொண்டு மிரட்டினார்களாம். மிரட்டலுக்கு பயந்த வீரமணி ரூ.10 கோடியை அவர்களுக்கு கொடுத்துள்ளார். அந்த ரூ.10 கோடியில் ரூ.8 கோடியை அரசியல் பிரமுகர்கள் இருவரும் பங்கு போட்டு கொண்டார்களாம். சாந்திக்கும், அவரது கணவருக்கும் ரூ.2 கோடி மட்டும்தான் கிடைத்திருக்கிறாம். மேற்படி மிரட்டி பணம் பறிக்க முயன்றவர்களை வைத்தே அரசியல் கட்சி பிரமுகர்கள் வீரமணிக்கு ஆதரவாக மாறியதால், சாந்தி ஏமாற்றம் அடைந்தாராம். இதனால் கோபத்தில் வீடியோ காட்சிகள் அடங்கிய 2 'பென்டிரைவ்'களையும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்களிடம், தன்னார்வலர்கள் மூலம் ஒப்படைத்தார்களாம் தங்களது பெயர் இதில் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார்களாம்.
அந்த வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் உடனடியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றும் ஒரு அதிகாரி வீரமணியிடம் பணத்தை கறக்க திட்டமிட்டுள்ளார். அவர், வீரமணியிடம் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், உங்களை கைது செய்ய போகிறோம் என்றும் கூறியிருக்கிறார்.
இதைகேட்டு வீரமணி அதிர்ச்சி அடைந்தார். கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.60 கோடி பணம் தரவேண்டும் என்று கேட்டார்களாம். இது பற்றி அதிகாரப்பூர்வமாக தகவல்கள் இல்லை.. இவை செவிவழியாக வந்த தகவல்கள் மட்டுமே. இந்த சூழலில் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த வீரமணி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை ரூ.80 கோடிக்கு விற்றுள்ளார். அந்த பணத்தில் ரூ.60 கோடியை குறிப்பிட்ட அந்த அதிகாரியிடம் கொடுத்தாராம். அந்த தகவல் வீரமணியின் டைரியில் இடம் பெற்றுள்ளது. அந்த ரூ.60 கோடியும் யார்-யாருக்கு பங்கிட்டு கொடுக்கப்பட்டது என்பது அந்த குறிப்பிட்ட அதிகாரிக்கு மட்டுமே தெரியுமாம். அந்த குறிப்பிட்ட அதிகாரி கைது செய்யப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாம். அவருடன் பணத்தை பங்கிட்ட அத்தனை அதிகாரிகளுமே சிறைக்கு போவதும், அம்பலப்படப்போவதும் உறுதி என்று சொல்கிறார்கள் தவெகவினர்.
இதனிடையே கடந்த பிப்ரவரியில் இந்த வழக்கில் 'வீடியோ' ஆதாரம் சரியாக இல்லை என்றும், சம்பந்தப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் வழக்கை முடித்துக்கொள்வதாகவும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்துடன், அதிகாரிகள் பணம் வாங்கியதாக கூறப்படும் விவாகரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.. அல்லது காவல்துறை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் தெரியவந்தால் மட்டுமே உண்மையான பிரச்சனை தெரியவரும்.
இந்த வழக்கு அரசியல் ரீதியா மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 'போக்சோ' வழக்கு தனியாக நடத்தப்படுகிறது. இன்னொரு பக்கம் ரூ.70 கோடி கைமாறியது தொடர்பாக விசாரணை நடக்கிறது. முதல்வர் விஜய் இந்த வழக்கை நேரடியாக கவனித்து வருகிறாராம். பணம் வாங்கியதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். ஆதாரங்கள் கிடைத்தால் காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 2 அரசியல் பிரமுகர்கள், குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி மற்றும் இடைத்தரகர்கள் அத்தனை பேருமே கைதாவது உறுதி என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.. யாரையும் முதல்வர் விஜய் விடுவாதாக இல்லையாம்..


Click it and Unblock the Notifications
