வெள்ளைக்காரனே பிச்சை எடுப்பான்.. இந்த படத்தை எடுத்தவர் மட்டும் இப்போ கையில கிடைச்சா! கலகல கவலை பதிவு
சென்னை: 2010 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான "சூப்பர்" (Super) படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, சமூக வலைதளமான X-ல் வைரலாகி வருகிறது. இயக்குநர் உபேந்திரா இயக்கிய இந்த படம், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவை ஒரு மிகவும் முன்னேறிய, எதிர்கால தொழில்நுட்பம் நிறைந்த நாடாக சித்தரிக்கிறது. ஆனால், இந்த காட்சியை பகிர்ந்து, "இந்த விளம்பரத்தை எடுத்தவன் மட்டும் இப்போ கைல கிடைச்சா பல பேர் கிட்ட செருப்படி விழும்" என்று @madraspaiyan_ என்ற பயனர் பதிவிட்டுள்ளார், இது பலரிடையே சிரிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
"சூப்பர்" திரைப்படம், 2010 டிசம்பர் 3 ஆம் தேதி கன்னட மொழியில் வெளியிடப்பட்டது. இதில், 2030 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு உலகளாவிய வல்லரசாக மாறியிருப்பதாகவும், அதிநவீன தொழில்நுட்பங்களால் நிரம்பியிருப்பதாகவும் ஒரு கற்பனை உலகம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

படத்தில், உபேந்திரா இயக்குநராகவும் நடிகராகவும் பங்கேற்றுள்ளார். இந்த படம் வெளியாகும் போது, அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் சமூக அரசியல் கருத்துக்களை முன்வைத்த விதம் பலரையும் கவர்ந்தது.
படத்தில் இடம்பெற்ற "2030 இந்தியா" என்ற காட்சியில், மக்கள் மிகவும் நாகரிகமாகவும், தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியவர்களாகவும் காட்டப்படுகின்றனர். வெளிநாட்டுக்காரர்கள் நம்மிடம் பிச்சை எடுப்பது போன்ற காட்சியமைப்பு படத்தில் இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு என்பதை மாற்றி, ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு என கணக்கீடு செய்யும் அளவுக்கு நாம் முன்னேறியதாக காட்டப்பட்டது.
இந்த விளம்பரத்தை எடுத்தவன் மட்டும் இப்போ கைல கிடைச்சா பல பேர் கிட்ட செருப்படி விழும் 🤣 pic.twitter.com/OQkGo4sm2y
— மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) March 19, 2025
ஆனால் சமீப காலமாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மிக மோசமாக போய் புது புது உச்சங்களை தொட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி, ரூ.86.11 ஆகும்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications