மிகப்பெரிய ட்விஸ்ட்.. திமுக - அதிமுக கூட்டணி? எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர்? பீதி கிளப்பிய யூடியூபர்
சென்னை: அதிமுக ஆட்சி அமைப்பதற்கு திமுக வெளியிலிருந்து ஆதரவு தரப்போவதாக ஒரு வதந்தி தீயாகப் பரவி வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் அதிமுக இடம் தரப்போவதாகவும், எடப்பாடி பழனிசாமி வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்பார் என்றும் பிரபல யூடியூபர் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டை 59 ஆண்டு காலமாக ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி தனது முதல் தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

தவெக தனித்து 108 இடங்களில் வென்றுள்ளது. திமுக தனித்து 59 தொகுதிகளிலும், அதிமுக தனித்து 47 தொகுதிகளிலும் வென்றுள்ளன. அதேபோல் திமுக கூட்டணியாக 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணியாக 53 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றிருப்பதன் மூலம், அக்கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. தவெக-விற்கு காங்கிரஸ் ஆதரவு தந்துள்ள நிலையில் தற்போது 113 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது. திமுக அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் விலகி தவெகவிற்கு 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தால்தான் அக்கட்சி ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் உள்ளது.
இந்த சூழலில், யாரும் எதிர்பாராத புதிய திருப்பமாக தமிழ்நாட்டை மாறி, மாறி ஆண்ட திமுக-வும், அதிமுக-வும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்காமல் தடுப்பதற்காக கூட்டணி அமைக்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இந்த இரு தொகுதிகளின் எண்ணிக்கையும் 106. அதேசமயம் திமுக கூட்டணியில் உள்ள விசிக 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் 2, தேமுதிக 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 4, அமமுக 1, பாஜக 1 இடங்களை தங்கள் வசம் வைத்துள்ளனர்.
திமுக அதிமுக கூட்டணியுடன் அவர்களது கூட்டணியில் இடம்பிடித்த கட்சிகளின் ஆதரவும் கிடைத்தால் நிச்சயமாக ஆட்சியைக் கைப்பற்ற இயலும். இந்நிலையில் தான் இப்படி ஒரு சம்பவம் உண்மையிலேயே நடக்கப்போவதாக சில தகவல்கள் உலா வரத் தொடங்கியுள்ளன.
பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான பிரசாந்த் ரங்கசாமி, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அதிமுக ஆட்சி அமைக்க, திமுக வெளியில் இருந்து ஆதரவு தரத் தயாராகிறது.
பிரேமலதாவின் தேமுதிக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய திமுக கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் அதிமுக இடம் தரும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறலாம்" எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார்












Click it and Unblock the Notifications