திமுகவா அதிமுகவா தினகரனா.. என்னது தேர்தல் முடிஞ்சுருச்சா.. தேமுதிகவை வறுக்கும் நெட்டிசன்கள்!
தேமுதிகவை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கும் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video

சென்னை: தேமுதிக இழுபறி சம்பந்தமாக, "முந்தானை முடிச்சு" படத்திலிருந்து வடிவேலு வரை மீம்ஸ்கள் இணையத்தில் ரவுண்டு கட்டி வருகின்றன. சும்மா சொல்லக்கூடாது.. புகுந்து விளையாடி வரும் மீம்ஸ் கிரியேட்டர்களின் திறமைகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
வாத்தியார் பாக்யராஜ் மாணவர்களிடம் பேசுவதுபோல, "எதுக்குடா துரைமுருகன் வீட்டுக்கு போனீங்க?
நாங்க ஏழு சீட்டு கேட்டோம்ல.. அதிமுக நாலு சீட்டு தர்றோம்னு சொல்லிட்டாங்க.. மீதி மூனு சீட்டு திமுக தருவாங்கன்னு கேக்க போயிருந்தோம்.." என்கிற முந்தானை முடிச்சு பட கமெண்ட்!
இதற்கு அடுத்த படம் வசூல்ராஜா எம்பிபிஎஸ். ஆபரேஷன் தியேட்டர் வாசலில் பழைய பேஷன்ட்டுகளை வெளியே அனுப்பிவிட்டு புது பேஷன்ட்டுகளை அட்மிட் செய்வது போன்ற காட்சி! மீம்ஸ் கிரியேட்டர்கள்தான் ஆபரேஷன் செய்ய போகும் டாக்டர்களாம்.
|
வசூல்ராஜா எம்பிபிஎஸ்
டாக்டர்கள் பேசுகிறார்கள்.. "டேய்.. பழைய பேஷண்ட் பாமகவை ரிலீஸ் பண்ணிடு.. புது பேஷன்ட் தேமுதிகவை அட்மிட் பண்ணிடு" என்கிறார்கள். அப்படியானால் இவ்வளவு நாள் பாமகவை மீம்ஸ் கிரியேட்டர்கள் வெச்சு செய்திருக்கிறார்கள். ஆபரேஷன் சக்ஸஸ் போல... இப்போது தேமுதிக அட்மிட் செய்து அடுத்த ஆபரேஷனில் இறங்குவது போல பதிவிட்டுள்ளனர்.
|
சைக்கிள்
இதற்கு அடுத்த ஒரு போட்டோ பதிவிடப்பட்டுள்ளது. ஒரு சைக்கிளை சுவற்றோரம் சாய்த்து வைத்திருக்கிறார்கள். பின் சக்கரம் பெரிசாக இருக்கிறது. முன் சக்கரம் சிறியதாக இருக்கிறது. அதாவது வளர்ந்து வந்த தேமுதிக இப்போது சுருங்கி விட்டதாம். அது மட்டும் இல்லை.. அந்த சைக்கிளுக்கு உட்கார சீட்டே கிடையாது. அதாவது தேமுதிகவுக்கு "சீட்டே" கிடையாதாம்!

எந்த கட்சி?
இதில் ஹைலைட்டாக ஒரு படம் உள்ளது. அதில், சினிமாவில் காமெடி, வில்லத்தனம் செய்யும் மொட்டை தலை நடிகர் ஒருவர் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது போல 4 பார்ட்டாக பிரித்து யோசிக்கிறார். முதலில் "திமுகவா", இரண்டாவது படம் "அதிமுகவா?" மூன்றாவது போட்டோவில் "தினகரனா", நான்காவது போட்டோவில், "என்னது எலக்ஷன் முடிச்சிருச்சா..." என்று ஷாக் ஆகிறார்.

இது சகஜம்தானே?
இப்படி தினுசு தினுசாக மீம்ஸ்கள் தெறித்து ஓடுகின்றன. "அவங்க துப்புறதும், நீங்க துடைக்கிறதும் எப்பவுமே நடக்குறதுதானே" என்று செய்தியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. கூட்டணி வருமோ இல்லையோ... இந்த மீம்ஸ்களை பார்க்கவும், படிக்கவும் செமயாவே இருக்கு!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications