இதெல்லாம் ரொம்ப ஓவர் கலாயா இருக்கேய்யா... இதுக்காகவாச்சும்.. ரஜினி அரசியலுக்கு வரணும் சீக்கிரம்...!
ரஜினி அரசியல் கட்சி துவங்குவது குறித்த அறிவிப்பு வைரலாகி வருகிறது
சென்னை: இதைவிட ரஜினியை வேறு யாராலும் கிண்டல் அடிக்க முடியாது.. ரஜினி கட்சி ஆரம்பிக்கிற வரை கடன் கிடையாது என்று ஒரு பெட்டிக்கடைகாரர் நோட்டீஸ் போர்டே வைத்துவிட்டார்.. இந்த நோட்டீஸ் போர்டுதான் இணையத்தில் இன்று திடீரென ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதோ.. அதோ என்று கால் நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லி.. அதிலும் 234 தொகுதிகளிலும் கட்சி ஆரம்பித்து போட்டி போடுவேன் என்று சொல்லி 2 வருடம் முடிந்து 3-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையும் வந்துவிட்டது.
ஒருவேளை சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கொண்டு ரஜினி தன்னுடைய அரசியல் பிளான் வைத்திருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. ஆனாலும் ரஜினி கட்சி ஆரம்பிப்பது என்பது பெருத்த சர்ச்சையாக, எந்த காலத்திலும் பரபரப்புக்கு உரிய சமாச்சாரமாகவும் மாறிவிட்டது.

ரஜினி அரசியல் வருகை குறித்து நெட்டிசன்களின் மீம்ஸ்களுக்கும் பஞ்சம் இல்லாத அளவுக்கு சோஷியல் மீடியாவும் செம பிஸியாகவே உள்ளது. இந்நிலையில், ஒரு அறிவிப்பு படு வேகமாக வைரலாகி வருகிறது. இது எந்த ஊர் என்று தெரியவில்லை.. ஒரு பெட்டிக்காரர் கடைக்கு முன்பு ஒரு அறிவிப்பு வைத்துள்ளார்.
அந்த கடை ஒரு சாதாரண பெட்டிக்கடைதான்.. 2 கண்ணாடி டப்பாக்களுக்கு நடுவில் ஒரு அட்டையில் "ரஜினி கட்சி ஆரம்பிக்கும்வரை கடன் கிடையாது" என்று எழுதி வைத்துள்ளார்
கடன் கிடையாது என்று முகத்தில் அறைந்தாற்போல பல கடைகளில் அறிவிப்பு பலகையை நாம் பார்த்திருக்கிறோம்.. ஆனால் கடன் தர முடியாது என்பதை மிக நாசூக்காக இந்த கடைக்காரர் அறிவிப்பு மூலம் வெளிப்படுத்தி உள்ளார். ஒருவேளை ரஜினி கட்சியை துவங்கவே மாட்டார் என்ற அசாத்தியமான நம்பிக்கையில் கடைக்காரர் இப்படி எழுதி வைத்திருப்பாரா என்று தெரியவில்லை.. ஆனால், இந்த நோட்டீஸ் இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கடனே ..கிடைக்காதுனு எவளவு அழகா சொல்லியிருக்காரு 😂😂😂
— Durai Manickam (@DuraiManickamd1) December 27, 2019
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications