ஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்!
Recommended Video
சென்னை: பச்சை, மஞ்சள், சிவப்பு கலர் புடவைகளில் கெத்தாக நாடாளுமன்ற அவையில் காட்சி தருகிறார்கள் கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன்!
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. மொத்தம் 37 பேரில், 3 பெண் எம்பிக்களும் அடக்கம்.
3 பேருமை திறமைசாலிகள்.. 3 பேருமே இலக்கியவாதிகள்.. பொதுவாக, இலக்கியவாதிகளுக்கு சமூக அக்கறை நிறைந்தே இருக்கும். அரசியல்வாதிகள் கொஞ்சம் அடக்கியே வாசித்தாலும், அவர்களைவிட அதிகமாகவே பொங்குபவர்கள்தான் இலக்கியவாதிகள். அது கனிமொழிக்கும் ஜோதிமணிக்கும் தமிழச்சிக்கும் நிறையவே உண்டு.

போட்டோ
இவர்கள் எம்பிக்களாக இன்று பதவியேற்று கொள்கின்றனர். இந்த நிலையில் நேற்று சபைக்கு வந்த இவர்கள் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டுள்ளனர். வெள்ளை நிற புடவையில் கனிமொழி, சிவப்பு நிற புடவையில் ஜோதிமணி, மஞ்சள் நிற புடவையில் தமிழச்சி தங்கபாண்டியன் என அசத்துகிறார்கள்.

தமிழச்சி, ஜோதிமணி
இவர்களுடன் சரத் பவார் மகள் சுப்ரியா சூலேவும் சேர அந்த போட்டோ செஷனே அமர்க்களமாக மாறியுள்ளது. இந்த நால்வரில் கனிமொழி மட்டும் சற்று அமைதியாக இருக்கிறார். அப்பா இல்லாத ஏக்கம் போகவில்லை போல கனிமொழிக்கு. தமிழச்சியும் சரி, ஜோதிமணியும் சரி பூரிப்பின் உச்சத்தில் உள்ளனர். கலக்கப் போகும் வேகம் அவர்களது முகத்திலேயே தெரிகிறது.
|
வைரல் போட்டோக்கள்
வெற்றி பெற்று எம்பியாக பதவியேற்ற பூரிப்போ என்னவோ, முகமெல்லாம் மலர்ச்சி... சிரிப்பு.. சந்தோஷமாய் இருக்கிறார்கள். கட்டிப்பிடித்து தங்கள் நேசத்தை வெளிப்படுத்தி கொண்டுள்ளனர். இந்த போட்டோக்களை ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, அவை அனைத்துமே வைரலாகி வருகிறது.

எதிர்பார்ப்பு
ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சனைகளை கனிமொழியும், தென்சென்னையில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சனையை தமிழச்சியும், கரூர் தொகுதி பிரச்சனையை ஜோதிமணியும் எவ்வாறு சமாளித்து மக்களை காக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடி உள்ளது.

பிரச்சனைகள்
இதைதவிர, தமிழகத்தை பாதிக்கக்கூடிய எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதை துணிந்து தட்டிக் கேட்டு, கட்டாயம் அவையை திணறடிக்க போகிறவர்கள் என்ற நம்பிக்கையை இந்த 3 பெண் போராளிகள் நம்மிடம் ஏற்படுத்தி விட்டார்கள்!

அசத்துங்க!
எல்லாம் சரிங்கம்மா, போட்டோ செஷனையெல்லாம் சட்டுப்புட்டென்று முடித்து விட்டு செயலில் இறங்குங்க.. தமிழகமே உங்களுக்காக ஓராயிரம் பிரச்சினைகளுடன் காத்திருக்கிறது.. தொகுதி பாரபட்சமே இல்லாமல் மொத்த மாநிலத்துக்காகவும் சத்தாக குரல் கொடுத்து தீர்வுகளுடன் திரும்பி அசத்துங்க.. வரலாறு உங்களை மனதார வாழ்த்தும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications