நடுரோட்டில் போதையில் ரகளை செய்த இந்த பெண்ணை நினைவிருக்கா? போலி போக்சோ வழக்கில் சிக்கினார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடுரோட்டில் மதுபோதையில் இரண்டு சிறுமிகள் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப்பெண் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

சமூக வலைதளங்களில் இன்றுவரை அந்த பழைய வீடியோ பலராலும் மீம்ஸ்களாகவும், கிண்டல் வீடியோக்களாகவும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அந்த வீடியோவில் இருந்த 17 வயதுச் சிறுமிதான், சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவான ரூ.5 லட்சம் லஞ்சம் மற்றும் போலி போக்சோ வழக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

crime chennai

வைரலான ரெட் ஹில்ஸ் சாலை வீடியோ

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை ரெட் ஹில்ஸ் சாலையில் நடுரோட்டில் நின்றபடி இரண்டு இளம்பெண்கள் போதையில் தள்ளாடியபடியும், அங்கிருந்தவர்களிடம் ஆபாசமாகப் பேசி வாக்குவாதம் செய்தபடியும் வீடியோ ஒன்று வைரலானது. சாலையில் சென்றவர்கள் எடுத்த அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் யூடியூப் ஆகிய தளங்களில் காட்டுத்தீ போலப் பரவியது.

அந்த வீடியோவில் பெண்கள் பேசிய சில வார்த்தைகளும், மோசமான சொற்களும், அவர்களின் செய்கைகளும் சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறின. பலரும் அதைப் பார்த்துச் சிரித்து, மீம்ஸ்களாகப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

ஆனால், அந்த வீடியோவிற்குப் பின்னால் ஒரு அப்பாவி இளைஞரின் வாழ்க்கையையே காப்பாற்றிய மிகப்பெரிய திருப்பம் ட்விஸ்ட் அப்போது யாருக்கும் தெரியாது.

பழிவாங்கத் தீட்டப்பட்ட போலி போக்சோ சதி

தெலங்கானாவைச் சேர்ந்த 40 வயது நபரான சுரேஷ் கண்ணா, மேட்ரிமோனி இணையதளத்தில் தனது வயது 25 என்று பொய் சொல்லி சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய அணுகியுள்ளார். சந்தேகமடைந்த அந்தப் பெண், சுரேஷ் கண்ணாவின் விருப்பத்தை நிராகரித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கண்ணா, அந்தப் பெண்ணின் குடும்பத்தைப் பழிவாங்கத் திட்டமிட்டார். அப்பெண்ணின் தம்பியான ஸ்ரீராம் என்பவரைப் பொய்யான போக்சோ வழக்கில் சிக்க வைக்க திட்டமிட்டார்.

இடைத்தரகர்கள் மூலம் 17 வயதுச் சிறுமி ஒருவரை ஏற்பாடு செய்தார். அந்தச் சிறுமியை சமூக வலைதளம் வழியாக ஸ்ரீராமிடம் மூன்று மாதங்கள் பழக வைத்து, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி திருமங்கலத்தில் உள்ள மால் ஒன்றிற்கு வரவழைத்துள்ளனர்.

பின்னர், ஸ்ரீராம் தன்னிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தச் சிறுமி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்காக சுரேஷ் கண்ணா தரப்பு, இடைத்தரகர்கள் மூலமாக காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்தராஜா ஆகியோருக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட ஆய்வாளர் விஜயலட்சுமி, ஸ்ரீராம் மீது போக்சோ வழக்கைப் பதிவு செய்தார்.

கைதைத் தடுத்து நிறுத்திய அந்த வைரல் வீடியோ

போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் ஸ்ரீராமை போலீசார் உடனடியாகக் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், சரியாக அதே நேரத்தில்தான், புகார் அளித்த அந்த 17 வயதுச் சிறுமி நடுரோட்டில் போதையில் வேறொரு பெண்ணுடன் சேர்ந்து கொண்டு.. சாலையில் நின்றவர்களிடம் சண்டையிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

புகார் கொடுத்த சிறுமியின் பின்னணி மற்றும் நடத்தை குறித்து அந்த வீடியோ மூலமாகப் போலீசாருக்குச் சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாகவே ஸ்ரீராமை கைது செய்தால் சிக்கல் ஏற்படும் என நினைத்து போலீசார் கைதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

நெய்வேலி விசாரணையில் உடைந்த உண்மை

இதற்கிடையில், மற்றொரு திருமண மோசடி வழக்கில் கடலூர் மாவட்டம் நெய்வேலி போலீசாரால் சுரேஷ் கண்ணா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீராமை கைது செய்யச் சொல்லி இடைத்தரகர்கள் மூலம் போலீசாருக்கு ரூ.5 லட்சம் கொடுத்தேன்; ஆனால் அவர்கள் இன்னும் கைது செய்யவில்லை என உண்மையை உளறினார்.

இதையடுத்து நடத்தப்பட்ட உயர்மட்ட விசாரணையில், பணம் பெற்றுக்கொண்டு பொய் வழக்குப் பதிவு செய்தது உறுதியானதால், ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்தராஜா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வெறும் ட்ரோல் வீடியோவாக பார்க்கப்பட்ட ஒரு வைரல் வீடியோ, தற்செயலாக ஒரு அப்பாவி இளைஞர் செய்யாத குற்றத்திற்காகச் சிறைக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+