பெரிய பிட்டு.. 14 வயசா 16 வயசா.. நடிகர் வடிவேலு அடித்த கமெண்ட்.. தேர்தல் ஆணையத்துக்கும் செம பாராட்டு
சென்னை: தேர்தல் ஆணையம் வார இறுதி நாட்களைத் தவிர்த்து, வேலை நாளான வியாழக்கிழமை தேர்தலை நடத்தியுள்ளது பாராட்டத்தக்கது, விடுமுறை கிடைத்தால் மக்கள் சுற்றுலா சென்றுவிடுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு ஆணையம் இப்படித் திட்டமிட்டிருக்கலாம் என்றும், வெளிநாட்டில் இருந்து வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக வந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றும் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். ..
சென்னை விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, தேர்தல் நாளில் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடிகர் வடிவேலு பேசத் தொடங்கினார்.

சென்னையில் உள்ள விருகம்பாக்கம் தொகுதியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் வாக்களிக்கத் தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் எந்தவித சிரமமும் பார்க்காமல் மாலை 6 மணிக்குள் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார். இது நாட்டிற்கு மிகவும் நல்லது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வடிவேலு பேட்டி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் 'அரசியலில் ரீ-டேக் எடுக்க முடியாது' என்று சொல்லி உள்ளாரே? என்று கேட்டதற்கு, அத்தகைய கருத்துக்களைப் பற்றிப் பேச இது சரியான இடமல்ல என்று கூறித் தவிர்த்தார்.
இன்றைய இளைஞர்களின் அரசியல் புரிதல் மற்றும் அவர்கள் வாக்களிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு வடிவேலு, இளைஞர்கள் எல்லாருக்கும் ஓட்டு இருக்கா? 14 வயசா, 16 வயசா.. இன்னைக்கு எத்தனை பேருக்கு ஓட்டு இருக்கு.. ஆனால் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்காங்க.. எல்லாரும் கத்துறா.. என் பேரன்கூட கத்துறான்.. ஆனால், மெச்சூரிட்டியான இளைஞர்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று நன்றாகத் தெரியும்..
தேர்தல் ஆணையம் சபாஷ்
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இந்த முறை அதிக அளவில் தாயகம் வந்து வாக்களிக்கிறார்கள்.. இது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் .. நம்ம மக்கள், தமிழர்கள் இங்கு வந்து வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்க மக்கள் காட்டும் ஆர்வம் ஆகியவை இதற்கெல்லாம் பின்னணியில் இருக்கலாம்.. முன்னெல்லாம் இறந்தவர்கள் பெயரில் வாக்குகள் பதிவான கதைகள் உண்டு, ஆனால் இப்போது மக்கள் விழிப்புணர்வு பெற்றுத் தங்கள் ஓட்டு இருக்கிறதா என்று பார்த்துப் பதிவு செய்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் வார இறுதி நாட்களைத் தவிர்த்து, ஒரு வேலை நாளான வியாழக்கிழமை தேர்தலை நடத்தியுள்ளதே என்ற கேள்விக்கு, விடுமுறை கிடைத்தால் மக்கள் சுற்றுலா சென்றுவிடுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு ஆணையம் இப்படித் திட்டமிட்டிருக்கலாம்..
பெரிய பிட்டு
ஊழல் குறித்த ஆங்கிலச் சுருக்கங்களைப் பற்றிச் செய்தியாளர் கேட்டபோது, "எனக்கு ஆங்கிலம் தெரியாது" என்று தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் கூறிப் பேட்டியை நிறைவு செய்தார். ஒட்டுமொத்தமாக, மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதே வடிவேலுவின் பிரதான கோரிக்கையாக இருந்தது.
செய்தியாளர்களிடம் உரையாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அப்போது வடிவேலு பேசிய பாணி, அப்படியே ஒரு சினிமா காட்சியைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருவதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
முன்னதாக வடிவேலுவிடம் செய்தியாளர்கள், உங்களுக்காகத்தான் சார் காலையில் இருந்து காத்திருக்கிறோம் என்றனர். அதற்கு வடிவேலு, இதெல்லாம் பெரிய பிட்டு என்று கிண்டலடித்தார்.













Click it and Unblock the Notifications