மந்திரியே சொல்லிட்டாரு.. பொறவு என்ன? நம்ம ஊருக்கு கண்டிப்பா தண்ணி வந்துரும்!
தண்ணீர் பஞ்சம் குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: குடிநீர் பிரச்சனை நம்மை ஆட்டிப்படைக்க, அரசாங்கத்திடம் இதுசம்பந்தமான கோரிக்கை மனு கொடுத்தவர்களின் கதி இதுதான் என்பதனை ஒரு சினிமா பட காட்சி மூலம் நெட்டிசன்கள் வாரி வறுத்தெடுத்து வருகிறார்கள்.
அந்த வீடியோ இதுதான்: அமைச்சர் வீட்டு வாசல் முன்பு கூட்டம் நிறைந்து வழிகிறது. அதில் ஒரு கிராமத்தை சேர்ந்த நான்கைந்து பேர் அமைச்சரிடம் கோரிக்கை மனுவுடன் நின்றிருக்கிறார்கள்.

வீட்டில் இருந்து அமைச்சர் வெளியே வருகிறார். ஒருவர், அவரிம், "இவங்க அத்திப்பட்டுக்காரவங்க.." என்று அறிமுகம் செய்ய, அமைச்சரோ என்ன விஷயம் என்று கிராமத்தினரிடம் கேட்கிறார். "எங்க கிராமத்துல குடிக்க கூட தண்ணி இல்லீங்க, மனுவுல எல்லாம் விவரமா எழுதியிருக்கோம்" என்கிறார்.
உடனே அமைச்சர் மனுவை வாங்கி உதவியாளரிடம், "பி.ஏ.. இதை கொஞ்சம் சீக்கிரமா கவனியுங்க" என்கிறார். பிஏவும், "கலெக்டர் சார் இதை கொஞ்சம் கவனியுங்க" என்று தருகிறார். கலெக்டர் அதை வாங்கி, "ஆர்டிஓ.. இதை கொஞ்சம் கவனிங்க.." என்று தருகிறார். ஆர்டிஓ அதை வாங்கி, "தாசில்தார் இதை கொஞ்சம் கவனியுங்க" என்கிறார்.
தாசில்தார் அதை கொண்டுபோய் தபேதாரரிடம் "இந்தாப்பா" என்கிறார். தபேதாரர் அந்த மனுவை வாங்கி தன் பாக்கெட்டில் வைத்து கொள்கிறார். அமைச்சரோ உடனே காரில் ஏறி கிளம்பி சென்றுவிடுகிறார்.
கொடுத்த மனு எங்கே போனது என்று தெரியாத கிராமத்தினரோ தங்களுக்குள், "மந்திரியே கவனிக்கறேன்னு சொல்லிட்டாரு.. நம்ம ஊருக்கு கண்டிப்பா தண்ணி வந்துரும்.. பொறவு என்ன? மகசர் போய் சேர வேண்டிய இடத்துல சேர்ந்துடுச்சு இல்லே" என்கிறார்.
தண்ணீர் தண்ணீர் படக் காட்சிதான்.. கண்ணீர் கண்ணீர் கதையும் கூட!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications