எப்பத்தான் கைய நீட்டுவாங்க.. காத்திருக்கும் நாய்கள்.. சைகை காட்டியதும் பாய்ச்சல்தான்

நாய்களுக்கு சாமி கும்பிட சொல்லிக் கொடுக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது செல்ல நாய்களுக்கு சாப்பிடும் முன் கடவுளை வணங்க சொல்லித்தரும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மனிதனின் உற்ற தோழனாக திகழ்வதில் நாய்க்கு இணை வேறில்லை. அதனால் தான் பலர் தங்கள் செல்ல நாய்களை தங்களுடைய சொந்த குழந்தையை போன்றே குடும்பத்தில் ஒருவராக நினைத்து பாசம் வைத்து வளர்த்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

செல்லமாக வளர்க்கப்படும் நாய்களும் தங்களுடைய எஜமானர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட இரு நாய்கள், தன் எஜமானியின் உத்தரவுக்காக சாப்பாட்டைக்கூட தொடாமல் காத்திருக்கும் வீடியோ நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.

 நன்றி சொல்லும் எஜமானி

நன்றி சொல்லும் எஜமானி

வைஷாலி மாதூர் என்பவர் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு பெண்ணும், அவரது இரண்டு செல்ல நாய்களும் வீட்டில் தரையில் அமர்ந்திருக்கிறார்கள். அங்கு இரண்டு தட்டுகளில் இரண்டு நாய்களுக்கும் தனித்தனியே உணவு வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் சாப்பிடும் முன் கடவுளுக்கு நன்றி சொல்லும் பழக்கத்தை நாய்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் தனது இரு கைகளையும் கூப்பி சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பாடுகிறார்.

சைகையில் உத்தரவு

சைகையில் உத்தரவு

அதை அமைதியாக உட்கார்ந்து கேட்டபடி இருக்கின்றன அந்த இருநாய்களும். அந்தப் பெண் ஸ்லோகத்தை சொல்லி முடித்த பின்னர், 'இப்போது சாப்பிடுங்கள்' என தனது கைகளால் சைகை செய்கிறார். இதையடுத்து அந்த நாய்கள் தங்களுக்கு வைக்கப்பட்டுள்ள உணவை சாப்பிட ஆரம்பிக்கப்படுகின்றன. அதைப் பார்த்து ரசிக்கிறார் அப்பெண்.

தோழி நெகிழ்ச்சி

தோழி நெகிழ்ச்சி

"மனதை நெகிழவைக்கும் இந்த வீடியோவில் எனது தோழி தன்னுடைய செல்ல நாய்களுக்கு உணவு சாப்பிடும் முன் கடவுளை வணங்க சொல்லிக்கொடுக்கிறார். அந்த இரண்டு பேரும் (நாய்கள்) நல்ல பசங்க", என விஷாலி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த நாய்களின் செயலை கண்டு நெகிழ்ந்துள்ளனர்.

சமத்து நாய்கள்

சமத்து நாய்கள்

"நம் வீட்டு குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஆனால் இந்த நாய்களின் சமத்து அனைவரையும் அசர வைத்துள்ளது", என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். உண்மையிலேயே அந்த பிரார்த்தனை புரிந்து தான் நாய்கள் காத்திருக்கின்றனவா அல்லது தனது எஜமானியின் கையசைவுக்காகக் காத்திருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ பார்ப்பவர்களை நிச்சயம் ஆச்சர்யப்பட வைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+