என்னாது விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காதா? திமுகவினர் வாழ்நாளில் மறக்க முடியாத வீடியோ! பாஜகவுக்கு பதிலடி
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என பாஜக விமர்சித்துள்ள சூழலில் திமுகவினரால் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
விஜயகாந்த்.. உயிருடன் இருந்தவரை எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களாலும் விமர்சனத்திற்குள்ளாகாதவர். குறிப்பாக இன்று வரை அவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட சொல்வதற்கில்லை. அந்த அளவுக்கு கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர்தான் கேப்டன்!

அந்த வகையில் விஜயகாந்துக்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் இடையே நீண்டகால நட்பு இருந்தது. அரசியல் எதிர்ப்புகள் இருந்தாலும், தனிப்பட்ட மட்டத்தில் ஆழமான மரியாதையும் அன்பும் நிலவியது.
கருணாநிதியால் விஜி விஜி என அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த்! கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். திமுக, தேமுதிகவுக்கு மாற்று சக்தியாக உருவாக்கியிருந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். அப்போது திமுகவையே பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் உருவெடுத்தார்.
இதனால் கருணாநிதியே, மக்களிடையே விஜயகாந்திற்கு இருக்கும் செல்வாக்கை எண்ணி பிரமித்தார் என சொல்வதுண்டு. இதைத் தொடர்ந்து கூட்டணி கட்சியாக இருந்தால் மக்கள் விரோத திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்ததற்காக அவருடன் விஜயகாந்த் சட்டசபையில் வாக்குவாதம் செய்தார்.
இதையடுத்து அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். பின்னர் 2016 ஆம் ஆண்டு தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க திமுக கடும் முயற்சி செய்தது. அப்போது கூட கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்த போது, "பழம் நழுவி பாலில் விழப் போகிறது" என தெரிவித்திருந்தார்.
திமுகவினரால் வாழ்நாளில் மறக்க முடியாத வீடியோ விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் சென்னை வந்ததும் வீடு செல்லாமல் கலைஞர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தியது #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும் https://t.co/ZWTc3XFD6n pic.twitter.com/gx0tmQi1js
— வெளவால் (@Iam_Bats) February 19, 2026
ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக விஜயகாந்த், திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. இதைத் தொடர்ந்து தேமுதிகவின் அரசியல் எதிர்காலம் மெல்ல மெல்ல அஸ்தமனமாக தொடங்கியது.
விஜயகாந்துடன் இருந்தவர்கள் அவருக்கு துரோகம் இழைத்துவிட்டு அதிருப்தி எம்எல்ஏக்களாக வலம் வந்தனர். இந்த நிலையில் விஜயகாந்திற்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் வெளிநாட்டில் சிகிச்சை எடுத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு காய்ச்சல் காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். விஜயகாந்த் மறைவுக்கு வந்த கூட்டத்தை பார்த்து அரசியல் கட்சியினர் வாயடைத்து போய்விட்டனர்.
விஜயகாந்த் இறப்புக்கு வந்த கூட்டத்தினர் ஓட்டு போட்டிருந்தால் கூட அவர் முதல்வராகியிருப்பாரே என்ற பேச்சுகளும் எழுந்தன. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு தேமுதிகவின் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு முதலே அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து வருகிறது. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தல், 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்திருந்தது.
இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்தது. மத்திய அமைச்சர் எல்.முருகன், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார். இதனால் தேமுதிக, என்டிஏ கூட்டணியில் இணையும் என சொல்லப்பட்டது.
ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக திமுக கூட்டணியில் முதல் முறையாக தேமுதிக இணைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக, "தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!" என சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தது.
இப்படியாக திமுகவுக்கு எதிராக விஜயகாந்த் இருந்தார் என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் திமுகவினரும் ஒரு முக்கிய வீடியோவை பரப்பி வருகிறார்கள்.
அதாவது 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கல்லீரல் பிரச்சனைக்காக விஜயகாந்த் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதி வயோதிகம் காரணமாக காலமானார்.
அவரது இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத விஜயகாந்த், அமெரிக்காவில் இருந்த படி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்டிருந்தார். அது போல் தனது சிகிச்சைகளை முடித்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த விஜயகாந்த் அதிகாலை நேரத்தில் வந்த போதும் நேராக தனது வீட்டிற்கு செல்லாமல் கருணாநிதியின் நினைவிடமான மெரினாவுக்கு சென்று அங்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த வீடியோவை கையில் எடுத்த திமுகவினர், "திமுகவினரால் வாழ்நாளில் மறக்க முடியாத வீடியோ விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் சென்னை வந்ததும் வீடு செல்லாமல் கலைஞர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தியது" என தெரிவித்து வருகிறார்கள்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications