"நானும் கடலூர்காரன்தான்டா".. விண்வெளி சென்ற "விர்ஜின் ரிச்சர்ட்" பூர்வீகமே தமிழ்நாடுதான்.. செம பின்னணி
சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை விண்ணுக்கு பறக்கும் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் தமிழ்நாட்டுடன் ரத்த பந்தம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான விர்ஜின் கேலடிக் கடந்த ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வெற்றிகரமாக சோதனை செய்தது. விர்ஜின் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர்தான் பிரிட்டிஷை கோடீஸ்வரரான சர் ரீச்சர்ட் பிரான்சன். விமானத்துறை, ஏற்றுமதி துறை என்று பல்வேறு துறைகளில் உலக அளவில் இந்த நிறுவனம் கோலோச்சி வருகிறது.
விர்ஜின் கேலடிக் நிறுவனத்தை தொடங்கி ஸ்பேஸ் ஆராய்ச்சிகளை சர் ரீச்சர்ட் பிரான்சன் செய்து வருகிறார். இந்த நிலையில் விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் சர் ரீச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா அடங்கிய குழு டெஸ்ட் சோதனையாக விண்ணுக்கு சென்றுவிட்டு திரும்பினார்கள்.

ஸ்பேஸ்
இந்த நிறுவனத்தின் விஎஸ்எஸ் யூனிட்டி என்ற விண்கலம்தான் விண்ணுக்கு ஏவப்பட்டது. விஎம்எஸ் ஈவ் (ஈவ் என்பது ரிச்சர்டின் தாயார் பெயர்) என்ற இரட்டை எஞ்சின் கொண்ட கேரியர் விமானம் மூலம் இந்த விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது. விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் சர் ரீச்சர் பிரான்சன் இதில் விண்ணுக்கு சென்றுவிட்டு பத்திரமாக குழுவோடு திரும்பி வந்தார்.

செல்கிறார்
விண்ணுக்கு சென்ற முதல் கோடீஸ்வரர் இவர்தான். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சன் தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தன் என்றால் நம்புவீர்களா? ஆம் இவருக்கு தமிழ்நாட்டில் ரத்த சொந்தங்கள் இருப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 2019ல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிச்சர்ட் பிரான்சன், என்னுடைய முன்னோர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்பு கொண்டவர்கள்.

டிஎன்ஏ
டிஎன்ஏ சோதனையில் நான் இதை கண்டுபிடித்தேன். என்னுடைய முப்பாட்டனின் தாத்தா இந்தியாவில்தான் வாழ்ந்தார். அவரின் மனைவி தமிழ்நாட்டை சேர்ந்த பெண். 1793 சமயங்களில் அவர்கள் கடலூர் அருகே தமிழ்நாட்டில் வசித்து இருக்கிறார்கள். அங்குதான் என் பாட்டியின் பாட்டி இருந்திருக்கிறார்.

யார் வார்
அவரின் பெயர் அரியா. மொத்தம் 4 தலைமுறைகளாக எங்கள் குடும்பம் தமிழ்நாட்டில் இருந்துள்ளது. எனக்கு இந்தியர்களோடு தொடர்பு இருக்கும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு நெருக்கமான தொடர்பு இருக்கும் என்று நினைக்கவில்லை. இந்தியாவில் நான் பார்க்கும் யாராவது ஒருவர் எதோ ஒரு வகையில் எனக்கு தூரத்து உறவினராக இருக்க கூட வாய்ப்புள்ளது, என்று ரிச்சர்ட் பிரான்சன் குறிப்பிட்டுள்ளார்.

உறவினர்
ரிச்சர்ட் பிரான்சன் இப்படி தமிழ்நாட்டில் தனது ரத்த பந்தங்கள் இருக்கலாம் என்று கூறியது பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ரிச்சர்ட் பிரான்சன் உடன் இன்று இந்தியாவை சேர்ந்தவருமான ஸ்ரீஷா பண்ட்லா விண்வெளிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications