"கை" எப்படி இருக்கு.. அப்படியே கருணாநிதி போல ஸ்டாலினும்.. காங். எம்பியின் பெருமிதம்!

ஸ்டாலினை விருதுநகர் எம்பி புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதி போல் தான் ஸ்டாலினும். காங். எம்பியின் பெருமிதம்- வீடியோ

    சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போலவே இருக்கிறார் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினும் என்று பெருமிதம் காட்டியுள்ளார் காங்கிரஸ் எம்பி ஒருவர்.

    அந்த எம்பி பெயர் மாணிக்கம் தாகூர். விருதுகநர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த லோக்சபா தேர்தலில் வைகோவை தோற்கடித்தவர் மாணிக்கம் தாகூர். இந்த தேர்தலில் திமுக - மதிமுக கூட்டணியில் இடம் பெற்று சீட் பிடித்து வென்றுள்ளார்.

    உண்மையில் விருதுநகர் தொகுதி மாணிக்கம் தாகூருக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகம் கடைசி வரை இருந்தது. காரணம், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக இந்தத் தொகுதியை பேசி வந்தனர்.

    மாணிக்கம் தாகூர்

    மாணிக்கம் தாகூர்

    பல வார சஸ்பென்ஸ் நீட்டிப்புக்குப் பின்னர் ஒரு வழியாக மாணிக்கம் தாகூருக்கே இந்த தொகுதி போய்ச் சேர்ந்தது. தொகுதி கிடைத்த உற்சாகத்தில் அபாரமாக தேர்தல் பணியாற்றி வென்றும் விட்டார் மாணிக்கம் தாகூர்.

    ஸ்டாலின் பரிசு

    ஸ்டாலின் பரிசு

    தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் சென்னை வந்த அவர் அங்கு திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்த நாளில் நேற்று கலந்து கொண்டார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்தார். ஸ்டாலின் தாகூருக்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கி மகிழ்ந்தார்.

    எப்படி இருக்கு கை

    அந்த சந்திப்பின்போது நடந்த சுவாரஸ்யத்தைத்தான் தற்போது நம்முடன் பகிர்ந்துள்ளார் மாணிக்கம் தாகூர். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், "அண்ணன் தளபதி@mkstalin அவர்களின் அன்புக்கு எடுத்துக்காட்டாக , விழா மேடையில் நினைவு பரிசு பெரும்பொழுது "கை எப்படி இருக்கிறது" என்று கேட்டபோது ! ( வெற்றி பெற்று சந்தித்த போது கையில் காயம்பட்டதால் கட்டுபட்ட கையுடன் இருந்தேன்) கலைஞரின் அதே குணம் ! #கலைஞர்96 என்று மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

    கருணாநிதி சிலேடை

    கருணாநிதி சிலேடை

    திமுக தலைவர் கருணாநிதி சிலேடையாக பேசுவதில் வல்லவர். யார் இவரை எப்படி கேட்டாலும் அதற்கு படு சாதுரியமாக, சிலேடையாக பதிலளிப்பதில் வல்லவர் கருணாநிதி. ஒருமுறை மருத்துவமனைக்கு அவர் பரிசோதனைக்காக போயிருந்தபோது நல்லா மூச்சை இழுத்துப் பிடிங்க, இப்ப விடுங்க என்று டாக்டர் கூறியபோது, மூச்சை விட்டுடக் கூடாதுன்னுதானே இங்கே வந்திருக்கேன் என்று அவர் கூறியபோது அத்தனை பேரும் சிரித்து விட்டனர்.

    நகைச்சுவை உணர்வு

    நகைச்சுவை உணர்வு

    அப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வு கொண்டவர் கருணாநிதி. தற்போது அதே பாணியில் ஸ்டாலினும் செயல்படுவதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நெகிழ்ந்து கூறியிருக்கிறார். ஸ்டாலின் பெயரைக் காப்பாற்றும் வகையில் தொகுதிக்கும் நல்லது செய்தா இன்னும் ஸ்டாலின் நல்ல மகிழ்ச்சி அடைவார் எம்பி. சார்.. !

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+