சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொய்ங் சொய்ங்.. ஒரே தோசை.. அதுவும் 'ஒன்சைட்' தோசை.. விருகை திமுக வேட்பாளர் 'அதகளம்'!

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் நேரமாச்சே.. துணி துவைப்பது, புரோட்டோ போடுவது, அம்மி அரைப்பது என்று டிஸைன் டிஸைனாக வேட்பாளர்கள் மல்லுக்கட்ட, இங்கு ஒரு வேட்பாளர் 'ஒன்சைட்' தோசை எனும் புது ஐட்டத்தை கண்டுபிடித்துள்ளார்.

Recommended Video

    தோசை சுட்டு வாக்கு சேகரித்த விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா - வீடியோ

    விருகம்பாக்கம் திமுக வேட்பாளராக களமிறங்கி இருப்பவர் பிரபாகர் ராஜா. அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ விருகை வி.என். ரவி, நாம் தமிழர் கட்சி சார்பில் த.சா. ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இங்கு பெரும் போட்டி இல்லையென்றாலும், களம் எப்போதும் சவாலாக தகதக மோடிலேயே உள்ளது.

     முக்கிய பகுதிகள்

    முக்கிய பகுதிகள்

    ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு மார்க்கெட், புகழ்பெற்ற ஏ.வி.எம். ஆகிய இரண்டும் தான் இந்த தொகுதியின் முக்கிய அடையாளங்கள். கோயம்பேடு, அதைச்சுற்றியுள்ள பகுதிகள் மெட்டுக்குப்பம், குலசேகரபுரம், ஐயப்பா நகர், சாலிகிராமம், தசரதபுரம், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், சூளைப்பள்ளம், விஜய ராகவபுரம், வடபழனி ஆகிய பகுதிகள் இங்கு முக்கியமானவை.

     விஜயகாந்த் வீடு

    விஜயகாந்த் வீடு

    அதுமட்டுமின்றி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விஜய், வடிவேல், தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஆகியோரது வீடுகள் இந்த தொகுதியில் தான் உள்ளன. இந்நிலையில், இத்தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா தோசை சுட்டு வாக்கு சேகரித்துள்ளார்.

     மலைச் சாரல் எண்ணெய்

    மலைச் சாரல் எண்ணெய்

    பிரசாரத்தின் போது, தனது ஆதரவாளர்களுடன் தடாலடியாக ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்த பிரபாகர் ராஜா, மாஸ்டரை அப்படியே ஒதுங்கச் சொல்லி, தண்ணீரை சூடான கல்லில் தெளித்து, ஹோட்டல்காரர்களின் அக்மார்க் தோசைக் கல் க்ளீனிங் பிராப்பர்ட்டியான விளக்கமாறால் கல்லை தேய்த்து, பின் ஒரு கல் தோசை ஒன்றை ஊற்றினார். பிறகு வடிவேலு சொல்வது போல் மலைச்சாரல் போன்று தோசையைச் சுற்றி எண்ணெய் ஊற்ற, பார்க்கும் நமக்கே சாப்பிடலாம் போல இருந்தது.

     ஒன்சைட் கல் தோசை

    ஒன்சைட் கல் தோசை

    ஆனால், தோசையை திருப்பி போடுவதை மறந்து அதை அப்படியே எடுத்து அழகாக மடித்து தர, 'அண்ணே.. தோசையை திருப்பிப் போடணும் என்று சொல்ல, ஒரு பக்கம் மாவுடன் மடித்த தோசையை மீண்டும் கல்லில் போட்டு மீண்டும் எடுத்து 'செர்வ்' பண்ணினார். மாஸ்டர்.. ஒரு ஒன்சைட் கல் தோசை பார்சல்ல்ல்ல்ல!!

    English summary
    virugambakkam dmk candidate prabhakar raja prepared dosa during campaign
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X