ஓட்டு கேட்டு சென்ற விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா கார் மீது கல்வீச்சு
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா போட்டியிடுகிறார். இதற்கு விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில இன்று வாக்கு சேகரிக்கச் சென்ற போது பிரபாகர் ராஜாவின் கார் மீது சககட்சி நிர்வாகியின் ஆதரவாளர்கள் பிரபாகர் ராஜா கார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் கார் கண்ணாடி உடைந்தது.

தற்போதைய விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தனசேகரின் வீட்டிற்கு அவர் அவர் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரபாகர் ராஜாவின் கார் மீது தனசேகர் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கே.கே. நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் 173 வேட்பாளர்கள் பட்டியலை முக ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில் விருகம்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா அறிவிக்கப்பட்டார்.
இதற்கு தற்போதைய விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ தனசேகர் எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பிரபாகர் ராஜாவின் குடும்பத்தினர் அதிமுக, பாஜக, பாமக ஆகிய ஒவ்வொரு கட்சியிலும் உள்ளதாக குற்றம்சாட்டினார். இதனிடையே சீட் கொடுக்காத அதிருப்தியில் விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ தனசேகர், திமுகவை விட்டு விலகி உள்ளார்.
-
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!












Click it and Unblock the Notifications