விருகம்பாக்கம், திருச்சி கிழக்கு! 2 தொகுதிகளில் களமிறங்கும் விஜய் திட்டம்?
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் எங்கு போட்டியிட்டாலும் அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் அங்கு திமுகவே நேரடியாகவே போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே இரு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்குகிறது. தவெகவை பொறுத்தவரை தற்போதைய நிலவரப்படி தனித்து போட்டியிடும் என்ற நிலையே உள்ளது. இதனால் விஜய் எந்த தொகுதியில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் போட்டியிடும் தொகுதி
இந்த நிலையில்தான், தவெக தலைவர் விஜய் சென்னை விருகம்பாக்கம், திருச்சி, கிழக்கு என மொத்தம் 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, நாகை, விக்கிரவாண்டி, வேளச்சேரி உள்ளிட்ட ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தான் 2 தொகுதிகளில் போட்டியிட விஜய் முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த இரண்டு தொகுதியுமே முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக இருக்க வேண்டும் என்று தவெக தலைமை முடிவு செய்து இருக்கிறதாம். அதாவது, தலைநகர் சென்னையில் உள்ள ஒரு தொகுதி, மத்திய மண்டலத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தவெக முடிவு செய்து உள்ளதாம்.
விருகம்பாக்கத்தில் போட்டியிட வாய்ப்பு
விருகம்பாக்கத்தை பொறுத்தவரை விஜய்யின் சொந்த தொகுதியாகும். கட்சி சார்பாக எடுக்கப்பட்ட டேட்டாக்களின் அடிப்படையிலும் இந்த இரண்டு தொகுதிகளை விஜய் போட்டியிட தவெக தலைமை முடிவு செய்து இருப்பதகவும் சொல்லப்படுகிறது. விருகம்பாக்கம் என்பது விஜய்யின் பெற்றோர்கள் வசிக்கும் இடம்.
சிறு வயது முதலே விஜய் வளர்ந்த பகுதி என்பதால், இந்த தனிப்பட்ட தொடர்புகள் காரணமாக சென்னையில் விருகம்பாக்கத்தில் போட்டியிடலாம் என்று தவெக முடிவு செய்து இருப்பதாகவும், இந்த தொகுதி தனக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறாராம். ஏற்கனவே விஜய் எந்த தொகுதியில் களமிறங்கினாலும் அவரை எதிர்த்து திமுகவே நேரடியாக களமிறங்க முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
2 தொகுதிகளில் போட்டி
அதாவது, விஜய்யை எதிர்த்து நேரடியாக திமுகவே மோத முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் சொல்கின்றன. கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தாலும் கூட விஜய் நிற்கிறார் என்றால் அந்த தொகுதியை கூட்டணியிடம் இருந்து கேட்டுப்பெற்று, கூட்டணிக்கு வேறு தொகுதியை ஒதுக்கிவிட்டு, விஜய் நிற்கும் தொகுதியில் திமுகவே நேரடியாகவே மோத முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் விஜய் தேர்தல் களத்தில் தனது சொந்த தொகுதிலயே கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை உருவாகும் எனத் தெரிகிறது. இதன் காரணமாகவும் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
-
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த பிக் பாஸ் தினேஷ்.. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ட்விஸ்ட் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
விஜயை பார்க்க.. சாக்கடையில் 3 கிமீ நீச்சலடித்து சென்ற தவெக தொண்டர்.. கடைசியில் ஏமாந்துட்டாரே -
"அனல் பறக்கும் களம்.. ஆளை காணோம் விஜய்!" டூப் முதல் ஹாலோகிராம் வரை.. தவெகவின் 'சமாளிப்பு' அரசியல்! -
தேர்தல் களத்தை விடுங்க.. சந்தையிலும் சூடுபறக்கும் விசில்.. விஜய் எண்ட்ரியால் திணறும் உற்பத்தியாளர்கள் -
மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய் -
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
குடும்பத்தை பார்க்காதவர் எப்படி மக்களை பார்ப்பார்..சுத்து போட்ட மக்கள்..தெறித்து ஓடிய தவெக வேட்பாளர் -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
விஜய் என்கிட்ட கேட்ட கேள்வி.. நான் எதிர்பார்க்கல! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! ஓபனாக பேசிய ராதாரவி -
ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர்












Click it and Unblock the Notifications