Vishal Marriage: நடிகர் விஷால்- தன்ஷிகா திருமணம் நின்று போனதா? நடந்தது என்ன?
சென்னை: நடிகர் விஷால் மற்றும் நடிகை தன்ஷிகா இன்று திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்த நிலையில், அதற்கான எந்த ஏற்பாடுகளும் நடக்காததால், திருமணம் மீண்டும் நின்றுவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. திட்டமிட்டபடி என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

விஷாலின் சினிமா வாழ்க்கை
2004-ஆம் ஆண்டு 'செல்லமே' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால், 21 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது தந்தை ஒரு தயாரிப்பாளர். அண்ணனும், அண்ணியும் நடிகர்கள். திருட்டு விசிடியை ஒழிக்க இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், இவர் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நடுக்கம் மற்றும் உடல்நலக்குறைவு
13 ஆண்டுகளுக்கு முன்பு நின்றுபோன 'மதகஜராஜா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியபோது, விஷாலின் கை, கால்கள் நடுங்கியதுடன், முகம் வீங்கியிருந்தது. இதனால், அவருக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. பின்னர், அவருக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாகவே கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, அவர் 'மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
திருமண அறிவிப்பு மற்றும் குழப்பம்
'யோகி' திரைப்பட விழாவில் நடிகை தன்ஷிகாவை காதலிப்பதாக விஷால் அறிவித்தார். இவர்களது திருமணம் ஆகஸ்ட் 29-ஆம் தேதி, விஷாலின் பிறந்தநாள் அன்று நடைபெறும் என்றும், புதிதாகத் திறக்கப்படும் நடிகர் சங்கக் கட்டிடத்தில் திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த சில தினங்களாகவே திருமணத்துக்கான எந்த ஏற்பாடுகளும் நடந்ததாகத் தெரியவில்லை. யாருக்கும் திருமண அழைப்பிதழ் வைக்கப்பட்டது போல் தெரியவில்லை. இதனால், ஏற்கெனவே ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நின்றுபோனது போல், இப்போதும் விஷாலின் திருமணம் நின்றுவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விஷால் தரப்பு விளக்கம்
இதுகுறித்து விஷால் தரப்பில் விசாரித்தபோது, "திருமணம் நின்றுபோகவில்லை, தள்ளிப் போயுள்ளது. நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. பணிகள் முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்திலேயே இவர்களது திருமணம் நடைபெறும்" என்று தெரிவித்தனர்.
நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விஷாலின் 'மகுடம்' படத்தின் டீசர் வெளியானது. அதற்கு தன்ஷிகா வாழ்த்து தெரிவித்திருந்தார். எனவே, இவர்களது திருமணத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications