Vishal Sai: விஷால் வீட்டில் சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம்! தடபுடல் விருந்தும் ரெடி!
சென்னை: விஷால்- சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம், அவருடைய அண்ணா நகர் இல்லத்தில் எளிமையாக நடந்து முடிந்தது. இருவரும் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இதையடுத்து இவர்களுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
'செல்லமே' படத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு அறிமுகமானவர் விஷால். இவர் 'சண்டகோழி', 'திமிரு', 'சிவப்பதிகாரம்', 'தாமிரபரணி', 'மலைக்கோட்டை', 'சத்யம்', 'தோரணை', 'தீராத விளையாட்டு பிள்ளை', 'அவன் இவன்', 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'பட்டத்து யானை', 'பாண்டியநாடு', 'நான் சிகப்பு மனிதன்', 'பூஜை', 'ஆம்பள', 'பாயும் புலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதகஜராஜா படம் தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸானது. இந்த நிலையில் ஆர்.பி சவுத்ரி தயாரிப்பில் மகுடம் என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். இது அவரது 35 ஆவது படமாகும்.
48 வயதாகும் விஷாலுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி எழுந்த போது நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்தால்தான் திருமணம் என தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சென்னையில் யோகி பட விழாவில் கலந்து கொண்ட அவர், அந்த படத்தின் ஹீரோயின் சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும் இருவருக்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த திருமண தேதி நெருங்க நெருங்க இருவரும் எந்த ஏற்பாடுகளையும் செய்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கு திருமணம் நடக்கவில்லை என தெரியவந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விஷால் தரப்பு கூறுகையில், நடிகர் சங்கம் கட்டும் பணியில் குறைந்தபட்சம் சில பணிகள் உள்ளன. அவற்றை முடித்துவிட்டு அங்கு திருமணம் செய்து கொள்வார். அதற்கான தேதியை பிறகு அறிவிப்பார் என்றனர்.
அது போல் இன்று விஷாலுக்கு பிறந்தநாள். இதையொட்டி ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் "இன்று பிற்பகலில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன். என் திருமணம் இந்த ஆண்டுக்குள் நடக்கும்" என்றார்.
இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள விஷால் இல்லத்தில் தன்ஷிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது எளிமையாக நடந்தது. இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நிச்சயதார்த்தம் முடிந்ததும் தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications