Vishal Sai: என் தேவதை தன்ஷிகா! விரைவில் திருமணம்! முத்தம் கொடுக்க மாட்டேன்.. விஷால் ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: இன்று (நேற்று) என் கல்யாணம் நடந்திருக்க வேண்டியது. ஆனால்... கடவுள் கொடுத்த தேவதை தன்ஷிகா என விஷால் உருக்கமாக தெரிவித்துள்ளார். பேச்சுலராக இதுதான் எனது கடைசி பிறந்தநாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இனி முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, இருவருக்கும் ஆகஸ்ட் 29, 2025 அன்று, விஷாலின் பிறந்தநாள் அன்று, எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வு, விஷாலின் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.

விஷால், தனது நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, "எனது நிச்சயதார்த்தம் குறித்து நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிட்டு, தொடர்ந்து ரசிகர்களின் ஆசீர்வாதங்களையும் ஆதரவையும் கேட்டுக் கொண்டார்.
விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இடையேயான நட்பு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியதாக, தன்ஷிகா தனது 'யோகி டா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அறிவித்தார். இந்த அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விஷால், நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரே திருமணம் செய்து கொள்வேன் என்று நீண்ட நாட்களாக கூறி வந்தார். தற்போது, நடிகர் சங்கக் கட்டிடம் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், விஷால் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார்.
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இருவரின் திருமணம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருந்த நிலையில், இந்த நிச்சயதார்த்த அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திருமணம் முடிந்த பிறகு சாய் தன்ஷிகா தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு, தன்ஷிகாவின் நடிப்பு வாழ்க்கைக்கு முழு ஆதரவு அளிப்பேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஷால் மேலும் கூறியிருப்பதாவது: பேச்சுலராக இதுதான் என் கடைசி பிறந்தநாள். இன்னிக்குதான் (நேற்று) என் கல்யாணம் நடந்திருக்கணும். ஆனால் நடிகர் சங்க கட்டடம் கட்டின பிறகு கல்யாணம் பண்ணலாம்னு தன்ஷிகா கிட்ட கேட்டேன்.
அதை மனப்பூர்வமாக ஏத்துக்கிட்டு நான் வெயிட் பண்றேன்னு சொல்லிட்டாங்க. கடவுள் கொடுத்த தேவதை தன்ஷிகா. மதகஜராஜா திரைப்படம்தான் இதற்கு உதாரணம். 13 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து ஒரு படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அது போல் கடவுள் ஒரு பாதையை அமைத்துக் கொடுப்பார்.
காதல் இல்லாமல் சினிமா இல்லை. ஆக்ஷன் இல்லாமல் சினிமா இல்லை. இது இரண்டும் இல்லாமல் சினிமா இருக்காது. ஆனால் கண்டிப்பாக முத்தக்காட்சி இருக்காது. இன்னும் 2 மாதத்தில் திருமணம் செய்து கொள்வோம். நடிகர் சங்க கட்டடத்தை இப்போதே புக் செய்துவிட்டேன். கட்டடம் திறந்ததும் அடுத்த முகூர்த்தத்தில் எனக்கு திருமணம். இந்த இடம் போதுமா என கார்த்தி கேட்டார். நான் பரவாயில்லை. என் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில்தான் நடக்க வேண்டும் என சொல்லிவிட்டேன் என விஷால் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications