ஜனநாயகன் படம் தியேட்டரில் வெளியாகணும்! ஓடிடி, சாட்டிலைட்டில் ரிலீஸானாலும் ரசிப்போம்! விஷால்
சென்னை: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஓடிடி , சாட்டிலைட் தளங்களில் வெளியானாலும் ரசிகர்களாகிய நாங்கள் விசிலடித்து மகிழ்வோம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் "ஜனநாயகன்" திரைப்படத்தின் காட்சிகள் கசிந்து இணையத்தில் வெளியானதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமும் வருத்தமும் நிலவுகிறது. படக்குழுவினரின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் வீணடிக்கப்படுவது குறித்து பலரும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யின் தீவிர ரசிகரான நானும் அவரது பிற ரசிகர்களும், திரையரங்குகளில் அவரது படங்களை கண்டு, ஆரவாரம் செய்து கொண்டாடி வந்துள்ளோம்.
"ஜனநாயகன்" நேரடியாக OTT அல்லது செயற்கைக்கோள் தொலைக்காட்சியில் வெளியானாலும், அதே உற்சாகத்துடன் வீடுகளுக்குள்ளேயே ரசிப்போம். அப்போது ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கும்-திரையரங்கிற்குப் பதில் எங்கள் வீட்டிற்குள்ளேயே எங்களது பிரியமான நடிகருக்காக விசில் அடிப்போம்.
தயாரிப்புத் தரப்புக்கு இது ஒரு கடினமான பொருளாதார முடிவு என்பதை நாங்கள் உணர்கிறோம். மேலும், திரைப்படம் சர்ச்சைக்குரியதாகத் தோன்றாவிட்டாலும், தணிக்கை வாரியத்தின் முடிவுகளை மதிக்கிறோம். சட்டபூர்வமாக, 'ஜனநாயகன்' விரைவில் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்பதே எங்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு. நாங்கள் அனைவரும் உங்கள் திரைப்படத்தை விரைவில் சட்டப்பூர்வமாகப் பார்க்கக் கிடைக்கும் என்று நம்புகிறோம். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் சிக்கல்களால் இன்றுவரை தணிக்கை சான்றிதழ் பெற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சி வெளியான நிலையில் இன்று அதன் முழு படமும் எச்டி பிரிண்டில் வெளியாகியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விஜயின் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் முழுமையாக வெளியாகியுள்ளது.
மர்ம நபர்கள் சிலர் ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்து அதிக அளவில் பகிர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
அது போல் படத்தை செல்போனில் வைத்திருப்பவர்கள், பார்ப்பவர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்ஆப், இன்ஸ்டா, டெலிகிராம் மூலம் ஜனநாயகன் படத்தை பகிர்வோரை கண்டுபிடிப்பது எளிது. சமூகவலைதளம் மூலம் வரும் ஜனநாயகன் படத்தை பகிரவோ, செல்போனில் சேமித்தோ வைக்க வேண்டாம். அப்படி வைத்திருந்தால் அதை பார்க்காமல் அழித்து விடுங்கள் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் பிரச்சினை வந்த போதும் விஷால் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications