மிஷ்கினுக்கு இதே வேலையா போச்சு.. மன்னிப்பு கேட்டும் விடாமல் வறுத்தெடுத்த விஷால்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் மிஷ்கின், பட நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் இன்று மற்றொரு சினிமா மேடையில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். இதற்கிடையே, "மிஷ்கினுக்கு இதே வேலையா போச்சு.. தவறாக பேசிட்டு மன்னிப்பு கேட்பதே அவருக்கு வழக்கமாகிவிட்டது" என விமர்சித்துள்ளார் நடிகர் விஷால்.

சென்னை கொளத்தூரில் தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இன்று சந்தித்தார் நடிகர் விஷால். குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார் விஷால்‌‌. அப்போது உங்களது படிப்பிற்கு உதவுவதற்காக பிச்சையும் எடுக்க நான் தயார், யாரும் குறை சொல்வதை கேட்காதீர்கள், எப்போதும் சிரித்து கொண்டே இருங்கள் என்றார். விஷால் நடித்த படத்தின் பாடல்களை குழந்தைகள் பாடியதைக் கேட்டு அவர் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினார்.

vishal mysskin

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், "யாரை வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம். இசையமைப்பாளர் இளையராஜாவை அவன், இவன் என்று மேடையில் பேச யாருக்கும் அதிகாரமில்லை. அவர் கிட்டத்தட்ட கடவுளின் குழந்தை. அவரது இசையின் மூலமாக அவ்வளவு பேர் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

மிஷ்கினுக்கு இதே வேலையா போச்சு. அதற்கு என்ன செய்ய முடியும்? தவறாக பேசிட்டு மன்னிப்பு கேட்கிறார். சில பேருடைய சுபாவத்தை மாற்ற முடியாது. மன்னிப்பு கேட்டாலும், அவர் பேசியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவர் பேசுவதை கைதட்டி கேட்பதை பார்க்க வருத்தமாக உள்ளது." என்றார்.

விஜய் அரசியல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த விஷால், "2026 ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல், தனி திரையரங்கம் போன்று இல்லாமல் மல்டிப்பிளக்ஸ் போன்ற பல முனை போட்டியாக இருக்கும். நடிகர் விஜய்யின் அரசியலை வரவேற்கிறேன். அவர் ஆசைப்பட்டபடி அரசியலுக்கு வருவது நல்லது. 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏராளமான மக்களுக்கு கிடைக்கவில்லை. நடிகர் விஜய்யின் தேர்தல் அறிக்கைக்கு பிறகு எனது நிலைப்பாட்டை தெரிவிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 'பாட்டில் ராதா' திரைப்பட ப்ரொமோஷன் மேடையில் இயக்குநர் மிஷ்கின் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. திரையுலகினர் பலரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் வழங்கும் 'பேட் கேர்ள்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மிஷ்கின் மன்னிப்புக் கோரினார்.

ஜோக்காக பேசியது, இரண்டு மூன்று வார்த்தை மேலே போய்விட்டது அவ்வளவே. மனதில் இருந்து பேசியதால் அப்படி ஆகிவிட்டது என்பதால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னைப் பற்றி விஷால் மோசமாக பேசும் போது கூட, மேடையில் விஷாலைப் பற்றி பேசும் போது கூட வசை வார்த்தைகளால் பேசவில்லை.

ஒரு படத்தின் மேடையில் அதைப் பற்றி பேசும் போது, என் மனதில் ஆழத்தில் இருந்து தான் பேசுவேன். சினிமாவையும், சினிமா மேடையையும் நேசித்துக் கொண்டே இருக்கிறவன். அதைத் தாண்டி வேறு வேலையே இல்லை. அவ்வளவு மனிதர்கள் நேசிக்க வேண்டியது இருக்கிறது. உங்கள் அனைவரின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு, உங்களை கடவுள் ஆக்குகிறேன்" எனப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+