Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதவாத ‘நிதி’.. விஷாலுக்கு பாலாவால் வந்த வினை! சாய தோள் கொடுத்த சாய் தன்ஷிகா! உடைந்த டாப் சீக்ரெட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரை உலகில் நீண்ட காலமாக ஆக்சன் ஹீரோவாக வலம் வரும் விஷாலுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகை சாய் தன்ஷிகா உடன் காதலில் இருப்பதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் பொது தளங்களில் விஷாலின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில் அதற்கு காரணம் குறித்து விளக்கியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் மூவி பாலாஜி பிரபு.

செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி சண்டக்கோழி படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் விஷால். தொடர்ந்து திமிரு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அவரது நடிப்பு பலரையும் கவர்ந்தது. பக்கத்து வீட்டு பையன் போன்ற அவரது தோற்றம் இளைஞர்களையும் பெண் ரசிகர்களையும் அவர் பக்கம் ஈர்த்தது.

கடைசியாக நடித்த சில படங்கள் அவருக்கு கை கொடுக்காத நிலையில் மதகஜராஜா, மார்க் ஆண்டனி போன்ற படங்கள் வெற்றி அடைந்தது. தொடர்ந்து தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தனது வெற்றி பயணத்தை தொடர தயாராகி வருகிறார்.

Vishal Sai Dhanshika cinema

இதற்கிடையே மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷனின் போது விஷாலின் கைகள் நடுங்கின. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு கூட விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஷால் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகை சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் தங்களுக்கு திருமணம் நடைபெறும் என விஷால் கூறினார்.

இதை அடுத்து இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதற்கிடையே விஷாலின் உடல் நலம் மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு காரணங்கள் குறித்து விவரித்து இருக்கிறார் பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் மூவிஸ் பாலாஜி பிரபு. இது தொடர்பாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய அவர்," அவன் இவன் படத்தில் பாலாவின் வற்புறுத்தல் காரணமாக மாறுகண் இருப்பது போல நடித்திருந்தார். இதற்காக அவர் கண்ணை தைத்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேல் அப்படியே நடித்ததால் கடுமையான மைக்ரேன் பிரச்சனை ஏற்பட்டது. தலைவலி போன்ற உடல் உபாதைகளால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

இதற்காக அவர் எடுத்துக் கொண்ட மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தியது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் விஷாலை பாதித்தது. படப்பிடிப்பு தளங்களில் மாத்திரை எடுத்தால் தான் தூக்கமே வரும் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதால், இயல்பாக செயல்பட முடியவில்லை. அது மட்டும் அல்லாமல் தான் உடன் படித்த தான் திரையுலகுக்கு அறிமுகம் செய்த 'வாரிசு நடிகர் அரசியல்வாதி' தன்னை ஏமாற்றியதை விஷாலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவசர தேவைக்கு கூட நிதி இல்லாமல் நெருக்கடியில் சிக்கித் தவித்தார். நண்பர்களால் ஏமாற்றம், தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை, பல கோடி கடன் ஆகியவை விஷாலை மேலும் பாதித்தது. நெருக்கமாக இருந்த உதயா போன்ற நடிகர்கள் அவருக்கு உதவவில்லை. பலர் அவரை விட்டு கழன்று கொண்டனர். நடிகர் ஆர்யா மட்டுமே விஷாலுக்கு உதவியாக இருந்தார். இதற்கிடையே அண்ணா நகரில் சைக்கிள் பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டதால் முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் தனிமையில் இந்த விஷாலுக்கு ஆறுதல் தேவைப்பட்ட நிலையில் தான் சாய் தன்ஷிகாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

பல படங்களில் நடித்திருந்தாலும் சாய் தன்ஷிகா திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இடையில் அவருக்கு சினிமா துறையில் பிரச்சனைகள் ஏற்பட ஒரு ஆறுதலாக பேசியவர் ஆதரவாக நின்றவர் விஷால். இருவரும் நட்பாக பழகிய நிலையில் தான் சாய் தன்ஷிகாவின் மேனேஜர் அருண் மறைந்தார். இதனால் பெரும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில் விஷால் பல்வேறு வகைகளில் உதவியிருக்கிறார். பரஸ்பரம் இருவரும் நட்போடு பழகிய நிலையில் தான் தற்போது திருமணம் செய்ய இருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+