டீசரை பார்த்து பொங்கிய அண்ணாமலை.. முழு விளம்பரத்தில் மொத்தமாக பதிலளித்த தமிழ்நாடு அரசு
சென்னை: செஸ் ஓலிம்பியாட் போட்டி குறித்த டீசரில் விஸ்வநாதன் ஆனந்த் இடம்பெறவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில், முழு விளம்பரத்தில் இந்தியாவின் முன்னணி செஸ் வீரர்கள் இடம்பெற்று உள்ளனர்.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது.
ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஏராளமான சர்வதேச வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கு ஏற்பாடும் விரைவாக நடந்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை பிரபலப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கி இருக்கிறது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை
இந்த போட்டியை மேலும் பிரபலமாக்கும் வகையில் விளம்பர படம் ஒன்றையும் தயாரித்து உள்ளது அரசு. பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த விளம்பர படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடித்து உள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த விளம்பர படத்தில் நடனமாடி இருக்கிறார்.

ரஜினிகாந்த் வெளியிட்ட டீசர்
இந்த விளம்பர படத்தின் 40 வினாடிகளை கொண்ட டீசரை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15 ஆம் தேதி வெளியிட்டார். சென்னை நேப்பியர் பாலத்தில் சதுரங்க தரையில் சதுரங்க காய்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வருவதைபோன்றும், கருப்பு வெள்ளை நிற ஆடையணிந்தவர்கள் நடனமாடுவதை போன்றும் இது படமாக்கபட்டு உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இதில் சில வினாடிகள் தோன்றுகிறார்.
Recommended Video

அண்ணாமலை விமர்சனம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விளம்பர படத்தை விமர்சித்தார். அதில், "செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் விஸ்வநாதன் ஆனந்த் இல்லையா? திமுக அரசை போன்ற இந்த விளம்பரத்தில் எந்த பொருளும் இல்லை. வெறும் காட்சி மட்டும்தான். கடவுளின் பொருட்டாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலிழந்து கிடக்கும் ஆட்சியின் மீது தனது கவனத்தை செலுத்தட்டும்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

முழு விளம்பரம்
இந்த நிலையில் 3:02 நிமிடங்கள் ஓடக்கூடிய சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடர்பான முழு பாடல் விளம்பரத்தையும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 21 ஆம் தேதி வெளியிட்டார். அதில், இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, இந்திய கிராண்ட் மாஸ்டர்கள், வர்ஷினி வேலவன், சசிகிரன், இந்தியாவை சேர்ந்த சர்வதேச மாஸ்டர் மானுவெல் ஆரோன் தொடங்கி அண்மையில் செஸ் போட்டிகளில் கலக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் பிரக்கியானந்தா வரை பலர் இதில் வணக்கம் கூறி வரவேற்பதை போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications