"விவேக்குக்கு ஏன் ஊசி போட்டீங்க".. வாயை கொடுத்த மன்சூர்.. பாய்ந்த புகார்.. முன்ஜாமீன் கோரி மனு!
முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார் மன்சூர் அலிகான்
சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் அவதூறு பரப்பிய நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் மன்சூர்...!
Recommended Video

நடிகர் விவேக், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.. பிறகு மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்...
விவேக் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் இருக்கும்போது, செய்தியாளர்களிடம் மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.. அப்போது, தடுப்பூசி குறித்தும், அரசைக் குற்றம் சாட்டியும் ஆவேசமாக பேசியிருந்தார்.

வீடியோ
மன்சூர் அலிகான் பேசிய இந்த பேச்சு வீடியோவாக சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது.. இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது. கொரோனா பரவல் குறித்து மக்களிடையே விவேக் மரணம் குறித்து தவறான தகவல் பரப்பி வரும் நடிகர் மன்சூர் அலிகான் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

கைது?
இந்த புகாரின்படி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகரை போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது.. எனவே, நடிகர் மன்சூர் அலிகான், விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவலும் வெளியானது. .

உள்நோக்கம்
இந்நிலையில், மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டதாகவும், உள்நோக்கத்தோடு தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லையெனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை
கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் நான் சொன்னேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தன்னுடைய முன்ஜாமீன் மனுவில் மன்சூரலிகான் சுட்டிக்காட்டியுள்ளார்... இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications