விவேக் ராமசாமி விலகியது ஏன்? ட்ரம்ப் ஆதரவு அலை வீசுகிறதா?
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி விலகியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.

இவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ட்ரம்ப் போட்டியிட உள்ளார். இந்தத் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடித்து மீண்டும் அதிபர் பதவி நாற்காலியில் அமரவேண்டும் என்று டொனால்ட் ரம்ப் வியூகம் வகுத்து வருகிறார்.
இந்த இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவ ஆரம்பித்துள்ளது.
ஆனால், இந்த இருவரையும் தாண்டி பெரிதும் இந்தியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டார் விவேக் ராமசாமி. அதற்குக் காரணம் அவர் ஒரு இந்திய வம்சாவளி. ஆகவே, அவர் அமெரிக்க அதிபராக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்தியர்களிடம் இருந்து வந்தது.

இந்தத் தேர்தல் களம் சூடுபிடிப்பதற்கு முன்னதாகவே விவேக் ஒரு நட்சத்திர மாக மாறி இருந்தார். உலகம் முழுவதும் அவரது பெயர் அடிபட ஆரம்பித்தது.
இந்நிலையில்தான் அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் இறங்கி இருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் பல மாற்றங்களைச் செய்வேன் என்று வாக்குறுதி அளித்து பரப்புரையில் ஈடுபட்டும் வந்தார்.
இவர், முன்னாள் அதிபர் ட்ரம்ப் கொள்கைகளை முன்வைத்து பிரச்சார வியூகத்தை அமைத்திருந்தார். ஆகவே, அவர் ட்ரம்பின் அடுத்த வாரிசாகவே பார்க்கப்பட்டார்.

இந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளரைத் தேர்வு செய்யும் போட்டி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வந்தது. ஐவோவா மாகாணத்தில் நடைபெற்ற வேட்பாளருக்கான முதல் தேர்தலில், 51% வாக்குகளைப் பெற்று ட்ரம்ப் வெற்றிவாகை சூடினார். இந்தத் தேர்தலில் விவேக் ராமசாமி 8% வாக்குகளைப் பெற்று 4வது இடத்தை தக்கவைத்தார்.
இந்த அறிவிப்புக்கும் பின், விவேக் ராமசாமி முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். தான் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளார் விவேக்.

38 வயதே நிறைந்த விவேக் ராமசாமியின் வருகை அமெரிக்கத் தேர்தல் களத்தை உற்சாகப்படுத்தி இருந்தது. மேலும் அவர் முதல்முறை போட்டியிட இருந்த வேட்பாளர் என்பதால் எதிர்பார்ப்பு அதிக அளவில் எகிறி இருந்தது. கடையில் அந்தப் புகழை எல்லாம் ட்ரம்ப்-க்கு விட்டுக் கொடுத்துள்ளார் விவேக்.

இவர் முன்னாள் முன்னாள் ஐ.நா. தூதர் என்பது கூடுதல் தகவல்.
ட்ரம்ப் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கத் தன்னை அழைத்ததாகவும், நியூ ஹாம்ப்ஷயரில் அவருடன் தான் ஒரு பேரணியில் கலந்து கொள்வதாகவும் ராமசாமி கூறி இருந்தார்.
"இந்தப் போட்டியில் அமெரிக்கத் தேர்தல் களத்தில் ட்ரம்ப் முதல் வேட்பாளர் இருக்க வேண்டும்," என்று கூறியுள்ள விவேக் ராமசாமி, "அவர் முன்னேறிச் செல்லும்போது, அதிபர் தேர்தலில் எனது முழு ஆதரவை ட்ரம்ப் பெறுவார்" என்றும் கூறியுள்ளார்.

இந்த அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள விவேக் ராமசாமி, இனி ட்ரம்ப் சார்பாக அவருக்காகத் தேர்தல் பரப்புரை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு இந்திய வம்சாவளியினர் போட்டி இருபதாக அறிவிப்பு வெளியாகியது முதல் பலரும் மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தனர்.
அந்தப் போட்டியிலிருந்து இப்போது விவேக் ராமசாமி கழன்று கொண்டுவிட்டார். அவரை அடுத்து நிக்கிஹேலி மட்டும் களத்தில் உள்ளார். அவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான்.

இந்த வேட்பாளருக்கான போட்டியில் டிரம்ப்பிடமிருந்து அதிக ஆதரவை விவேக் ராமசாமியால் பெற முடியவில்லை. ட்ரம்ப் குடியரசுக் கட்சி வாக்காளர்களின் விசுவாசத்தை ராமசாமியைவிட அதிகமாகத் தக்க வைத்துக் கொண்டார். ஆகவே, போட்டியிலிருந்து விவேக் ராமசாமி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஐயோவாவில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்வு தேர்தலில் டரம்ப் பேசுகையில், "விவேக் தனது பிரச்சாரத்தை 'தலைமுறைகளில் சிறந்த ஜனாதிபதியாகவும்' தொடங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போது அவர் பிரச்சார தந்திரங்களைச் செய்யத் தொடங்கிவிட்டார்" என்று பொருள்படும் விதத்தில் கூறியிருந்தார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications