அட்டகாசமான அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது Vivo Y200! விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன? விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவோ (VIVO) நிறுவனத்தின் Y200 எனும் 5ஜி மொபைல் விரைவில் இந்திய சந்தைக்கு வர இருக்கிறது. மொபைல் சந்தையை பொறுத்த அளவில் விவோ எப்போதுமே தனி ரகம்தான்.

ஒரு காலத்தில் பட்டன் மொபைல்கள்தான் உலகம் என்று இருந்தது. ஆனால் காலம் மாற மாற அதி நவீன செல்போன் இந்த உலகத்தையே புரட்டி போட்டுவிட்டது. அதற்கு அடிப்படையானது ஆண்ட்ராய்டுதான். அதுநாள் வரை நோக்கியா, சாம்சங் என்று புலம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு ஆண்ட்ராய்டு காட்டிய உலகம் வேற லெவல். அதன் பின்னர் மொபைல் என்றாலே ஆண்ட்ராய்டுதான் என்று ஆகிவிட்டது. என்னதான் ஆண்ட்ராய்டு மொபைல் வந்தாலும் சாமானிய மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றாற் போல விலை குறைவாகவும், அதே நேரம் தரமானதாகவும் இருக்கும் மொபைல்கள்தான் சந்தையில் நிலைத்து நின்றன.

Vivo Y200 5G mobile is going on sale in the Indian market soon

அப்படி நின்று பெயர் வாங்கிய நிறுவனம்தான் விவோ. நீடித்த உழைப்பு, அதே நேரம் குறைவான விலை, கூடுதல் வசதிகள் இவை மூன்றும் சேர்ந்து மக்களை விவோ பக்கம் தள்ளியது. உதாரணமாக விவோ வருவதற்கு முன்னர் அதிக மெகா பிக்சல் கொண்ட கேமரா கொண்ட மொபைல்கள் அதிக விலைக்கு விற்பனையானது. ஆனால் விவோ இந்த ஆட்டத்தை அப்படியே மாற்றியது. கேமரா எல்லாம் ஒன்னும் கிடையாது என்று 50MP, 75MP, 100MP என வசதிகளை அள்ளி வழங்க தொடங்கியது. இப்படியாக தற்போது தனது Y200 5ஜி எனும் புதிய மொபைலை சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த மொபைல் குறித்த அறிவிப்பு வெளியான பின்னர், அதன் மீதான் எதிர்பார்ப்பு எகிற தொடங்கியது. இந்நிலையில் இது இந்தியாவில் வரும் 23ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இதன் சிறப்பம்சங்களாக இது 6.67-இன்ச் முழு-எச்டி+ (2,400 x 1,080 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே குறிப்பிடப்படுகிறது. இது தவிர 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் இருக்கிறது. ஆண்ட்ராய்டு வர்ஷன் 13ன் அடிப்படையில் Qualcomm Snapdragon 4 Gen 1 SoC மூலம் இந்த மொபைல் இயங்குகிறது.

Vivo Y200 5G mobile is going on sale in the Indian market soon

இதன் ஒரு சிறப்பம்சம் டிஸ்பிளே எனில், மற்றொன்று கேமரா. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட கேமராக்கள் இதில் இருக்கின்றன. அதேபோல முன் கேமராவில் 16 மெகாபிக்சல் சென்சார் இருக்கும். இந்த மொபைல் பேட்டரியின் திறன் 4,800mAh. இதனை 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்துக்கொள்ளலாம். மொத்தமாக 190 கிராம் எடையும் 7.69 மிமீ தடிமன் கொண்டதாகவும் இருக்கும் இந்த மொபைல் ரூ.24,000க்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் ஏற்கெனவே சந்தையில் இருக்கும் பல மொபைல்களை காட்டிலும் இது ஏராளமான அம்சங்களை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+