யார்னு தெரியுதா பாருங்க.. கும்முன்னு இருக்கும் சித்ரா.. பக்கத்தில் ஜம்முன்னு ஒரு குட்டி.. செம வைரல்
சித்ராவின் குழந்தை போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: சித்ரா போட்டோவுடன் மற்றொரு குழந்தை போட்டோவும் இணைந்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலம் அளவுக்கு சீரியலில் பிரபலமாகி இருக்கும் சித்ரா, மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டு போயுள்ளார்.
இதற்கு காரணம் வெறும் நடிப்பு என்று மட்டும் சொல்லிவிட முடியாது.. காம்பியரிங், நடனம், மாடலிங் என மல்ட்டி திறமைகளை கொண்டவர் சித்ரா.

எல்லாவற்றுக்கும் மேலாக அன்பானவர்.. மனித நேயமிக்கவர்.. மென்மையான சுபாவமும், அதில் உறுதியான பிடிப்பும் கொண்டவர்.. உழைப்பின் மேல் உயரிய மதிப்பை கொண்டவர்.. அதில் தன்னை நிரூபித்தும் காட்டியவர்.. பெற்றோர் மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருந்தவர்.. அதனாலேயே தினம் தினம் சித்ராவின் பெயர் மீடியாவில் தொடர்ந்து அடிபட்டு கொண்டிருக்கிறது.
சித்ரா இறந்தபிறகு, அவரது ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு வீடியோவையும், பேட்டிகளையும் அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.. ஒவ்வொரு டிக்டாக் வீடியோக்களிலும் அவர் செய்யும் குறும்புத்தனங்களும், பாட்டும், டான்சும், கலகலப்பான அந்த முகமுமாய் இருந்தவரை பார்த்தவர்கள் அனைவருமே சோகத்தின் விளிம்புக்கு சென்றுவிடுகின்றனர்.
இப்படித்தான், சித்ரா ஷூட்டிங்கில் கடைசியாக எடுத்த போட்டோவும் வைரலானது.. சித்ரா முதல் நாள் ஷூட்டிங்கில் எடுத்த போட்டோவும் வைரலானது.. இப்போதும் ஒரு போட்டோ வைரலாகிறது.. அது சித்ராவின் குழந்தை போட்டோ.. மார்ப் செய்யப்பட்ட அந்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக இருக்கிறது..
ஏற்கனவே சித்ரா எடுத்த போட்டோக்களை, குழந்தையில் இருப்பதுபோலவே மாற்றி உள்ளனர்.. கும்மென்று இருக்கும் சித்ரா, அந்த குழந்தை போட்டோக்களிலும் ஜம்மென்று இருக்கிறார். ஒரு நடிகை இறந்தபிறகு, இத்தனை பாசத்தை வேறு யார் மீதும் சமீபத்தில் வைத்து தமிழக மக்கள் பார்த்ததில்லை.. எல்லாத்துக்கும் காரணம் கள்ளங்கபடமில்லாத அந்த குணம்தான்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications