"இது"தான் சித்ராவின் கடைசி படம்.. தலை நிறைய மல்லி பூ.. தழைய தழைய பட்டு சேலை.. முகம் முழுக்க சிரிப்பு
சித்ரா கடைசியாக எடுத்து கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: சித்ராவின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதற்கு காரணம், அதுதான் சித்ரா சீரியலில் நடித்த கடைசி நாள், கடைசி காட்சி, கடைசி போட்டோ என்பதால்தான்!
சினிமா பிரபலம் அளவுக்கு சீரியலில் பிரபலமாகி இருக்கும் சித்ரா, மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளார்.

இதற்கு காரணம் வெறும் நடிப்பு என்று மட்டும் சொல்லிவிட முடியாது.. காம்பியரிங், நடனம், மாடலிங் என மல்ட்டி திறமைகளை கொண்டவர் சித்ரா.
எல்லாவற்றுக்கும் மேலாக மனித நேயமிக்கவர்.. மென்மையான சுபாவமும், அதில் உறுதியான பிடிப்பும் கொண்டவர்.. உழைப்பின் மேல் உயரிய மதிப்பை கொண்டவர்.. அதில் தன்னை நிரூபித்தும் காட்டியவர்.. அதனாலேயே தினம் தினம் சித்ராவின் பெயர் மீடியாவில் தொடர்ந்து அடிபட்டு கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் முழுவதும் விஜய் டிவியில் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியின் புரோமோ இதயத்தை பிசைந்தெடுத்தது.. அந்த புரோமோவில் அவர் செய்யும் குறும்புத்தனங்களும், பாட்டும், டான்சும், கலகலப்பான அந்த முகமுமாய் இருந்தவரை பார்த்தவர்கள் அனைவருமே சோகத்தின் விளிம்புக்கு சென்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இன்னொரு போட்டோ வைரலாகி வருகிறது.. அதுதான் சீரியலில் அவர் கடைசியாக நடித்த காட்சியாம்.. இதுவரை சித்ரா நடித்த காட்சிகள் அனைத்தும் நாளையுடன் அதாவது 23-ம்தேதியுடன் முடிவடைய போகிறதாம்.. சித்ராவின் பிறந்தநாளை கொண்டாடுவதுதான் கடைசியாக எடுக்கப்பட்ட காட்சிகளாம். அப்போதும் சித்ரா சிரித்தபடியே காணப்படுகிறார்.
அந்த ஷூட்டிங் நடக்கும்போது, பிரேக் நேரத்தில் வழக்கம்போல் சித்ரா சகநடிகர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார்.. அதில் ஒரு போட்டோவில் மீனா, மீனாவின் அம்மா இவர்களுக்கு நடுவில் உட்கார்ந்துள்ளார் சித்ரா.. அதே மல்லிகைப்பூ.. அந்த பூவைவிட மென்மையான சிரிப்புடன் சித்ரா போஸ் தருகிறார்..
மீனா அம்மாவின் கையை இறுக பற்றிக் கொண்டுள்ளார்.. சித்ரா எத்தனையோ போட்டோக்களை இதுவரை எடுத்திருந்தாலும், இது கடைசி போட்டோ என்பதால் இணையத்தில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications