மேஷ ராசி நேயர்களே! "ராசி பலன்" விஜே விஷால் சுந்தரை நினைவிருக்கா? போலீஸுக்கு எப்படி உதவுறாங்க பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 26ஆம் தேதி விபத்தில்லா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சன் டிவியில்1990 களில் ராசிபலனை தொகுத்து வழங்கிய விஷால் சுந்தர் வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். நமது உயிர் நம் குடும்பத்தினருக்கு முக்கியம் என்பதால் வாகனங்களை இயக்கும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த மாதம் 26ஆம் தேதி ஜீரோ ஆக்சிடென்ட் டே எனப்படும் விபத்தில்லா தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை பல்லவன் இல்லத்தில் அதற்கான லோகோவை சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

police traffic

இந்த லோகோ வெளியிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு சிறு விபத்தும் ஏற்படுத்தாமல் வாகனத்தை இயக்கியதற்காக மாநகர போக்குவரத்து கழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 5 ஓட்டுநர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து விபத்தில்லாமல் இயக்குவோம் என உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர். விபத்து, விதிமீறல், அபராதம் என அனைத்தையும் ஜீரோ என்ற நிலைக்கு கொண்டு வரும் போது லஞ்சமும் ஜீரோ ஆகும் என்பதால் இந்த விழிப்புணர்வு நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

police traffic

அது போல் பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் கொடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜீரோ ஆக்சிடென்ட் டே என்பது குறித்து பல்வேறு பிரபலங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தொகுப்பாளினி விஷால் சுந்தர் ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது: ஹாய்! நான் விஷால், என்னை சூப்பர் சீன்ஸ், ராசி பலன், ஹாலிவுட் டைம்ஸ் உள்ளிட் நிகழ்ச்சிகளில் ஆங்கராக பார்த்திருப்பீர்கள். நமது சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையும் மருத்துவமனையும் விபத்தில்லா தினம் (Zero Accident Day) என்ற விஷயத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

police traffic

இந்த முன்முயற்சியானது நம் ஒவவொருத்தருக்காகவும்தான். நாம் சாலையில் தினமும் வாகனங்களை இயக்கி வருகிறோம். இரு சக்கர வாகனங்களில் செல்வதென்றால் நிச்சயம் ஹெல்மெட் போட்டிருக்க வேண்டும். கார்ல போவதாக இருந்தால் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.

நமது உயிர் நமக்கு முக்கியம். அதைவிட நாம் நம்முடைய குடும்பத்திற்கு மிகவும் முக்கியம். என்னடா இவங்க மட்டும் கார்ல சீட் பெல்ட் போடாமல் உட்கார்ந்திருக்காங்க என பார்க்கிறீர்களா. நான் சரியான பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இறங்குவதற்கு முன்பு உங்களுக்கு இந்த மெசேஜை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோ என தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் 1990களில் தொகுப்பாளினியாக இருந்தவர் விஷால் சுந்தர். தினமும் காலையில் ராசி பலன் சொல்லும் விஜே விஷால் சுந்தரை நினைவிருக்கிறதா? மேஷ ராசி நேயர்களே என ஆரம்பித்து மீன ராசி வரை அன்றாட ராசிபலன்களை கூறுவார். இவரது தமிழை கேட்டு மயங்காதவர்களே கிடையாது. தூய்மையான தமிழில் அழகான உச்சரிப்பை கொடுப்பார்.

அனுகூலமான திசை, அணிய வேண்டிய ஆடையின் நிறம் உள்ளிட்டவைகள்தான் காலை நேரங்களில் பெரும்பாலான வீடுகளில் டிவிகளில் ஒலிக்கும். இப்படிப்பட்ட அனைவருக்கும் பிடித்தமான விஷால் சுந்தர் தற்போது லண்டனில் உள்ளார். அவர் 18 ஆண்டுகளாக சன்டிவியில் ராசி பலனை படித்து வந்தார்.

இவர் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே பகுதி நேரமாக ராசி பலனை படித்தார். எம்பிஏ படித்திருக்கும் இவர் ஒரு கட்டத்தில் வேலை விஷயமாக 3 ஆண்டுகளுக்கு லண்டன் செல்ல வேண்டியிருந்ததால் ராசி பலன் நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+