சசிகலா வீட்டில் பரபரப்பு.. விவேக்கின் மனைவி கீர்த்தனா தற்கொலை முயற்சி.. தீவிர சிகிச்சை.. என்னாச்சு
சசிகலா அண்ணன் மகன் விவேக்கின் மனைவி கீர்த்தனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
சென்னை: சசிகலா அண்ணன் மகன் விவேக்கின் மனைவி, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது?
சென்னை, பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர் பிரீஸ் கார்டனை சேர்ந்தவர் விவேக்... சசிகலாவின் அண்ணன் மகனான இவர், ஜாஸ் சினிமா நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஜாஸ் சினிமா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் இவருக்கு ஜெயலலிதா தலைமையில் கடந்த 2016ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அபார்ட்மென்ட்
ஆனால் ஜெயலலிதா விவேக் திருமணத்துக்கு செல்லவில்லை... அதற்கு பதிலாக வாழ்த்து கடிதம் மற்றும் பரிசு பொருட்கள் அனுப்பி வைத்தார்... இதற்கு பிறகு சசிகலாவின் தலைமையில் விவேக்- கீர்த்தனா தம்பதிக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.. துற்போது, விவேக் ஜெயராமன் தன்னுடைய மனைவி கீர்த்தனாவுடன் எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார்... கீர்த்தனாவுக்கு இப்போது 28 வயதாகிறது.. கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது.

கீர்த்தனா
கருத்து வேறுபாடுகள் இவர்களுக்குள் அதிகமாக தலைதூக்கவும், குடும்பத்தில் நிறைய சண்டைகள் தம்பதிக்குள் வந்துபோயுள்ளன.. ஒருகட்டத்தில், தன்னுடைய மாமியாரான இளவரசியிடமும், தன் கல்யாணத்தை நடத்தி வைத்த சசிகலாவிடம் இந்த பிரச்சனையை கீர்த்தனா கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், விவேக்கை அவர்கள் 2 பேருமே கண்டிக்கவில்லையாம்.. குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் அவரை கண்டிக்கவில்லை என்கிறார்கள்..

சசிகலா
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவேக் வீட்டிற்கு தாமதமாக வந்திருக்கிறார்.. இதனால், விவேக்கிற்கும் கீர்த்தனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டை வெடித்துள்ளது... பிறகு, விவேக் சமாதானப்படுத்தியும் கீர்த்தனா ஆறுதல் அடையவில்லை என தெரிகிறது... பிறகு திடீரென கீர்த்தனா வீட்டில் இருந்த, தேவையில்லாத மாத்திரைகளை அதிகளவில் விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்... சிறிது நேரத்தில் அவர் மயங்கியதை கண்ட விவேக் அதிர்ந்து போய், உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனையில் கீர்த்தனாவை சேர்த்துள்ளார்..

சீரியஸ் கண்டிஷன்
அங்கு கீர்த்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.. பிறகு டாக்டர்கள் பரிந்துரையின்படி, அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கீர்த்தனா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மருத்துவமனை அளித்த தகவலின்படி பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகலா குடும்பத்தில் நடந்த இந்த சம்பவம், அதிமுக, அமமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications