லட்டு சான்ஸ் தரும் தமிழக அரசு! மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் 50000 பேருக்கு தொழில் பயிற்சி! சூப்பர்
சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் என்பது கடந்த 1983ல் நிறுவப்பட்ட அரசு நிறுவனமாகும். இது கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் தன்னம்பிக்கை மூலம் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டதாகும்.. கிராமப்புறப் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான பல திட்டங்களை இந்த நிறுவனம் செயல்படுத்தி வரும் நிலையில், குட்நியூஸ் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
தமிழக அரசு பெண்களுக்கு உதவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக கடன் உதவி, மானியங்கள், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் போன்றவைகளை சொல்லலாம்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 39 சுய உதவிக் குழுக்கள் கிராமப்புறங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 4.76 லட்சம் சுய உதவிக் குழுக்களில் சுமார் 54 லட்சம் பெண்கள் உள்ளனர்.
சுய உதவிக்குழுக்கள்
ஏழைப்பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில், சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டமும் ஆரம்பமாகி உள்ளது.. இந்தியாவிலேயே முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியது தமிழக அரசு தான். இந்த அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு சில சலுகைகளும் உண்டு.
அதேபோல தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட பல்வேறு விற்பனை வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
அதேபோல, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் ஊரக பகுதிகளில் செயல்படும் அனைத்து சுய உதவிக்குழுக்களுக்கும் திட்ட செயலாக்கம் குறித்த ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அதன்படியே 39.48 லட்சம் உறுப்பினர்களுக்கு நிர்வாகம், நிதிமேலாண்மை மற்றும் தலைமைத்துவம் குறித்த ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின், சமுதாய திறன் பயிற்சி பள்ளி வழியாக, 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க, அரசு முடிவு செய்திருக்கிறதாம்.. இது குறித்து, அந்நிறுவனம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இளைஞர்களுக்கு நேரடி பயிற்சி
அந்த அறிக்கையில், "தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், உள்ளூர் பகுதியில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை வைத்து, சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் வழியாக, இளைஞர்களுக்கு நேரடி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளிகளின் வாயிலாக, எலக்ட்ரீஷியன், இருசக்கர வாகன பழுதுபார்ப்பு, 'AC மெக்கானிக்' உட்பட, 30 பிரிவுகளில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, தற்போது 25 கோடி ரூபாய் செலவில், தமிழகம் முழுதும் 2,500 சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.
இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பு
இவற்றின் வாயிலாக, நடப்பாண்டு, 50,000 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிவழங்கப்பட உள்ளன. இப்பயிற்சி பெற, கிராமப்புற இளைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த, 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள்.
கல்லுாரி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், மாவட்டங்களில் உள்ள ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் மற்றும் வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications